ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

தவளை போல் தன் வாயால் மோசம் போன ஓவியா.. கண்ணுக்கு தெரியாமல் ரெடியாகி வரும் ஆப்பு

இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் நடிகை ஓவியா பற்றிய தேடுதல் தான் அதிகமாக இருந்து வருகிறது. 2009ஆம் ஆண்டு “நாளை நமதே” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஓவியா. அதன்பின் நடித்த “களவாணி” படம் இவருக்கு நல்ல ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது.

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ “பிக் பாஸ்” முதல் சீசனில் அறிமுகமானார் ஓவியா. அந்த சீசனில் இவரது ஆதிக்கம் பெரிதாக இருந்தது. எல்லோரும் “ஓவியா ஆர்மி” என சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இவர் புகழடைந்தார். அந்த ஷோவில் இருந்து வெளியேறிய பின்னர் கலகலப்பு, 90எம்எல், களவாணி 2 போன்ற படங்களில் நடித்தார்.

அதன் பின் ஓவியா தமிழ் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட படங்களில் நடித்து அவர் சம்பாதித்த மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டார். இப்பொழுது சமூக வலைத்தளங்களில் ஓவியா மற்றும் அவரது காதலரின் அந்தரங்க வீடியோ வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது.

கண்ணுக்கு தெரியாமல் ரெடியாகி வரும் ஆப்பு

இந்த வீடியோவிற்கு ஓவியா எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் இருப்பதுதான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அது மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு அந்த வீடியோ உண்மைதான் என்பது போல் பதில் அளித்து வருகிறார்.

ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு என்ஜாய் பண்ணுங்கள், அடுத்த முறை தெளிவாக அதிக நேரம் ஓடக்கூடிய வீடியோ அனுப்புகிறேன் என்றெல்லாம் பதில் அளிக்கிறார். இதன் மூலம் வீடியோவில் இருப்பது அவர்தான் என்பதை ஒத்துக் கொள்கிறாரா என்று தெரியவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அதை எடுத்தது யார், எப்படி வெளிவந்தது என்பதற்கு காவல்துறையிடம் முறையான விளக்கத்தை கொடுக்க வேண்டும், இல்லையென்றால் கைது நடவடிக்கைக்கு தயாராக வேண்டும்.

- Advertisement -spot_img

Trending News