ரெண்டுகெட்டா படமாய் மாறிய மாவீரன்.. ஆர்வக்கோளாறாக நடித்து சொதப்பிய சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan Maveeran Movie: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த மாவீரன் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் இப்படத்தை மிகவும் நம்பிக்கையுடன், இவருடைய முந்தைய படங்களான டான், டாக்டர் போல மிகப் பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்த்து இருந்தார்.

அதற்காக முழு முயற்சியும் எடுத்து கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன் என்று பலமுறை இவர் இப்படத்தைப் பற்றி கூறியிருக்கிறார். அதனாலயே இவருடைய ரசிகர்கள் இப்படத்தை பார்ப்பதற்கு ரொம்பவே ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த படம் முழுமையாக திருப்தி அடையாமல் போய்விட்டது.

Also read: எனக்கும் அந்த வில்லனுக்கும் போட்டியா?. வெற்றி கண்ட பின் நாசுக்காய் மேடையில் சோப்பு போட்டு வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்

அதற்கு காரணம் இப்படத்தில் இயக்குனர் மடோன் சொல்ல வந்த விஷயத்தை கரெக்டாக கொண்டு வந்து சேர்க்கவில்லை. ஆனால் இவருடைய மிகப்பெரிய சிறப்பே எந்த ஒரு விஷயத்தையும் சரியான முறையில் மக்களுக்கு கொண்டு சொல்லக்கூடியவர். அப்படிப்பட்ட இவர் இப்படத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் முழுக்க முழுக்க சிவகார்த்திகேயனுக்கு ஆகவே எடுக்கப்பட்டிருக்கிறது.

அதனாலேயே இப்படம் கொஞ்சம் சொதப்பலாகி ரசிகர்களிடமிருந்து ரெண்டுகெட்டா விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆனால் ரொம்ப வித்தியாசமான கதை அம்சம். இதை இன்னும் கொஞ்சம் சீரியஸாக எடுத்திருந்தால் முழுமையான வெற்றியை பார்த்திருப்பார்கள். அதற்கு பதிலாக இந்த கதையை வைத்து காமெடி செய்து விட்டார்கள்.

Also read: நியாயவாதியாக நடந்து கொண்ட உதயநிதி.. நம்பி ஏமாந்த சிவகார்த்திகேயன்

பொதுவாக சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்க வருவார்கள். அதனாலேயே இந்த படத்தை அனைவரும் ரசிக்கும்படி எடுக்க வேண்டும் என்று நினைத்து பல விஷயங்களில் சொதப்பி விட்டார். இதற்குப் பதில் ஒன்று சீரியசாக எடுத்து இருக்கலாம் அல்லது முழு காமெடி படமாவது எடுத்து இருக்கலாம்.

அடுத்தபடியாக கிளைமாக்ஸ் காட்சியும் எதிர்பார்த்த அளவிற்கு மக்களுக்கு திருப்தியை கொடுக்கவில்லை. அதிலும் ஏகப்பட்ட தவறுகள் இருக்கிறது. இப்படத்தை இந்த அளவுக்கு சொதப்பனதுக்கு முக்கிய காரணம் சிவகார்த்திகேயனின் ஆர்வக்கோளாறான நடிப்பு மற்றும் இயக்குனரின் அஜாக்கிரதையால் தான் என்று ரசிகர்கள் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Also read: பிசிறு தட்டாமல் ரஜினியை பாலோ செய்யும் சிவகார்த்திகேயன்.. மாவீரன் பட தயாரிப்பாளர் சொன்ன ரகசியம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்