1500 படங்களில் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் மனோரமாவின் 6 படங்கள்.. கூட்டுக் குடும்பத்துடன் வெற்றி கண்ட கண்ணம்மா

Manorama Best 6 Movies: எத்தனையோ நடிகர்கள் நடிகைகள் நடித்து வந்தாலும் ஒரு சில கேரக்டரை நம்மால் மறக்கவே முடியாது. அப்படி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் நடித்த ஆச்சி மனோரமா தற்போது வரை சாதனை நடிகையாக நிலைத்து நிற்கிறார். இவருடைய எதார்த்தமான நடிப்புக்கு அனைவரும் அடிமை என்று சொல்வது போல் இவருக்கு கோடான கோடி ரசிகர் இன்னும் இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. அப்படிப்பட்ட இவருடைய நடிப்பை தூக்கலாக காட்டிய படங்களை பற்றி பார்க்கலாம்.

தில்லானா மோகனாம்பாள்: ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி, பத்மினி டிஎஸ் பாலையா மற்றும் மனோரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காவிய படமாக தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில் மனோரமா நடித்தார் என்று சொல்வதை விட அப்படியே வாழ்ந்து காட்டினார் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இதில் ஜில் ஜில் ரமாமணி என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்.

Also read: உருகி உருகி காதலித்து துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மனோரமா.. கைக்குழந்தையுடன் காலை வாரிவிட்ட கணவர்

சம்சாரம் அது மின்சாரம்: விசு இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் விசு, லட்சுமி, சந்திரசேகர், ரகுவரன், மனோரமா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் மனோரமா, கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் அனைவரது நடிப்பையும் மிஞ்சும் அளவிற்கு தத்ரூபமான நடிப்பை கொடுத்திருப்பார். முக்கியமாக பெர்னாண்டஸ் என்ற கேரக்டரை வாய மூட வைக்கும் அளவிற்கு வார்த்தைகளாலே அடித்து விலாசி இருப்பார்.

நடிகன்: பி வாசு இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு நடிகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சத்யராஜ், குஷ்பு, கவுண்டமணி, மனோரமா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் மனோரமா, கற்பகவல்லி என்ற கதாபாத்திரத்தில் குஷ்புவின் பாதுகாவலராக இருப்பார். அப்போது இவருடைய வீட்டிற்கு கிழவனாக வேஷம் போட்டு வரும் சத்யராஜை பார்த்து ஒருதலையாக காதல் வயப்பட்டு விடுவார். இவர் பேசும் ஒவ்வொரு காதல் டயலாக்கும் ரொம்பவே நகைச்சுவையாகும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும்.

Also read: கமல் – மனோரமா காம்போவில் மனதில் நிற்கும் 6 படங்கள்.. கடைசி நேரத்தில் கேரக்டர் மாற்றப்பட்ட படம்

புதிய பாதை: பார்த்திபன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு புதிய பாதை திரைப்படம் வெளிவந்தது. இதில் பார்த்திபன், சீதா, விகே ராமசாமி, மனோரமா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் மனோரமா ஆயா கதாபாத்திரத்தில் பார்த்திபன் வீட்டுக்கு பக்கத்தில் இருந்து கொண்டு அவர்களுக்கு நல்லது கெட்டதுகளை எடுத்து செய்யும் கேரக்டரில் எதார்த்தமான நடிப்பை கொடுத்திருப்பார்.

அபூர்வ சகோதரர்கள்: சங்கீதம் சீனிவாஸ் ராவ் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், கௌதமி, மனோரமா மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையை முதலில் எழுதிய பிறகு மனோரமா கால் சீட் கிடைத்த பின்பு தான் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று அவருடைய நடிப்புக்காக காத்துக் கொண்டிருந்த ஒரு படம். அப்பேற்பட்ட இந்த படத்தில் கமல் மற்றும் மனோரமா இருவரும் சேர்ந்து நடித்து அனைவரது வரவேற்பையும் பெற்றார்கள். அதிலும் ராஜா கைய வச்சா பாடலில் இவர்கள் செய்த அட்ராசிட்டி பார்க்கவே ரசிக்கும்படியாக இருக்கும்.

சின்ன கவுண்டர்: ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு சின்ன கவுண்டர் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜயகாந்த் அம்மாவாக மெய்யாத்தா என்ற கேரக்டரில் மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் கவுண்டமணியுடன் அடிக்கடி வம்பு இழுத்து, சுகன்யாவிடம் ஏட்டிக்கு போட்டியாக நடந்து கொள்ளும் சுவாரசியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் கவுண்டமணி இவரை நக்கல் அடிக்கும் விதமாக அய்யோ ஆத்தா நீ சிரிக்க மட்டும் செஞ்சிடாத பயமா இருக்கு என்று கலாய்க்கும் இடம் நகைச்சுவையாக இருக்கும்.

Also read: 700வது படத்தில் கால் பதிக்கும் பாக்யராஜ் பட ஹீரோயின்.. மனோரமாவை ஓவர் டேக் செய்ய முயற்சி