ஆடு ஜீவிதம் படத்தில் முதலில் நடிக்க இருந்த நம்ம மாஸ் ஹீரோ.? இயக்குனர் வெளியிட்ட டாப் சீக்ரெட்

Aadu Jivitham Movie: பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு மேலாக உருவாக்கப்பட்டு வரும் கதைதான் ஆடு ஜீவிதம். இப்படத்தில் அமலா பால் ஜோடியாக இணைந்துள்ளார். அத்துடன் ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். மேலும் இப்படம் மார்ச் 28ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது.

சர்வதேச அளவில் திரைப்பட விழாக்களிலும் ஆடு ஜீவிதம் படம் பங்கேற்கப்பட்டது. இப்படத்தின் கதையானது வறுமையில் வாடும் பிருத்விராஜ் பணம் சம்பாதிப்பதற்காக வெளியூர் செல்கிறார். போன இடம் பாலைவனமாக இருப்பதால் அங்கே சிக்கித் தவித்து துயர படுவதை கதையாக எடுக்கப்பட்டிருக்கிறது.

பின்பு இதிலிருந்து பிருத்விராஜ் எப்படி போராடி மீண்டு வருகிறார் என்பதுதான் கதை. இப்படம் ஒரு உண்மை கதையானது. இதில் பிரிதிவிராஜ் உடலை வருத்திக்கொண்டு நடித்து இருப்பதால் இப்படம் தேசிய விருது எப்படி வாங்கிவிடும் என்று பலரும் எதிர்பார்ப்பை வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட கதாபாத்திரத்துக்கு முதலில் இந்த மாஸ் ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டது இப்படத்தின் இயக்குனர் பிளெஸ்ஸி. இது சம்பந்தமாக விக்ரமிடம் பேசிய பொழுது விக்ரமுக்கும் இப்படத்தின் கதை பிடித்து போய்விட்டது. அதனால் நடிப்பதற்கு சம்மதத்தை தெரிவித்துவிட்டார்.

கையில நெய்யை வச்சுக்கிட்டு வெண்ணெய்க்கு அலைஞ்ச விக்ரம்

அதே நேரத்தில் தமிழில் கமிட்டான மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் ஆடு ஜீவிதம் படத்தில் அதிக கவனம் செலுத்த முடியாமல் வந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார். ஆனால் அந்த சமயத்தில் விக்ரம் கமிட் ஆகி நடித்த பத்து என்றதுக்குள்ளே, இரு முருகன், ஸ்கெட்ச் போன்ற படங்கள் அனைத்துமே ஃபெயிலியர் படங்களாக அமைந்து விட்டது.

கையில நெய்யை வச்சுக்கிட்டு வெண்ணெய்க்கு அலைஞ்ச கதையாகத் தான் விக்ரமின் நிலைமை இருக்கிறது. அதாவது வெற்றிக்காக பல அவமானங்களை சந்தித்து கதாபாத்திரத்துக்காக எந்த அளவுக்கு உடலை வருத்திக்கொண்டு நடிக்க முடியுமோ அதை சரியாக செய்து உச்ச நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

ஆனாலும் தொடர் வெற்றியை கொடுக்க முடியாமல் தற்போது தள்ளாடி கொண்டு வருகிறார். அந்த வகையில் கைக்கு எட்டின ஒரு விஷயத்தை விட்டு விட்டு தற்போது தெருத்தெருவாய் அலைந்து வருகிறார். அப்பொழுது மட்டும் சரியாக விக்ரம், ஆடு ஜீவிதம் படத்தில் கமிட் ஆகி நடித்திருந்தால் கண்டிப்பாக ஒரு டர்னிங் பாயிண்டாக விக்ரமுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கும் என்று இப்படத்தின் இயக்குனர் பிளெஸ்ஸி கூறியுள்ளார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை