நம்ம வீட்டு டிவி, நம்ம வீட்டு ரிமோட், பச்சோந்தியாக மாறிய கமல்.. ஆண்டவருக்கு சமாளிக்க சொல்லியா கொடுக்கணும்

Kamal Speech: நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவராக இருக்கும் கமல் தற்போது வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதாவது ஆரம்பத்தில் அரசியலுக்குள் நுழைந்த பொழுது தன்னிச்சையாக செயல்படுவேன் என்று சொல்லி எதிர்க்கட்சிக்கு எதிராக குரல் கொடுத்தார்.

ஆனால் அது தற்போது வேலைக்காகாது என்று தெரிந்ததும் திமுக கட்சியுடன் கூட்டணி வைத்துவிட்டார். அந்த வகையில் வருகிற 18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி இருக்கும் என்று அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

இதனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் கூட்டணி மாறுதல் மற்றும் தொகுதி பங்கீடு என பல விஷயங்களில் தீவிரம் காட்டி தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மக்கள் நீதி மையத்தின் கட்சித் தலைவர் கமல் மும்மரமாக செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிரச்சார வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கமல் மற்றும் மக்கள் நீதி மையத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டார்கள். மேலும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் 27ஆம் தேதி முதல் 30-ம் தேதி நேரடியாக திமுக கூட்டணிக்காக கமல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

இது சம்பந்தமாக அந்த நிகழ்ச்சியில் கமல் பேசியதில், டிவியில் ரிமோட்டை எடுத்து அடிச்சீங்களே, ஆனால் இறுதியில் அங்கேயே போகிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒன்னே ஒன்னு சொல்கிறேன். ரிமோட் இன்னும் என் கையில் தான் இருக்கிறது, டிவியும் அங்கே தான் இருக்கிறது.

நம்ம வீட்டு ரிமோட், நம்ம வீட்டு டிவி. ஆனால் அந்த டிவிக்கான கரண்டையும், பேட்டரியும் உருவாக்கக்கூடிய சக்தி ஒன்றியத்தில் இருக்கிறது. அதனால் இனிமேல் இதை நான் எரிந்தால் என்ன, வைத்திருந்தால் என்ன? இந்த மாதிரியான செயல்களுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

தன்மானத்தை விட்டு தலை வணங்க மாட்டேன்

70 ஆண்டுகளுக்கு முந்திய காலத்தில் உள்ள சாதியத்தை மீண்டும் தூக்கிப் பிடிக்க எதிர்க்கட்சி முயற்சிக்கிறது. அதனால் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். மோடி தற்போது இங்கே வருகிறார் என்றால் அவருக்கு நான் தலை வணங்குவேன். எதற்காக என்றால் மக்களின் ஓட்டுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காக.

ஆனால் அதற்காக என்றைக்கும் தன்மானத்தை விட்டு தலை வணங்க மாட்டேன் என்று கமல் பல விஷயங்களை பேசி ஈசியாக சமாளித்து விட்டார். கமலுக்கு சமாளிக்க சொல்லியா கொடுக்கணும். அதனால் தனியாக நின்னு ஜெயிக்க முடியாது என்று தெரிந்ததும் இப்படி பச்சோந்தியாக மாறி திமுகவுக்கு கூஜா தூக்க கிளம்பி விட்டார்

Next Story

- Advertisement -