எதிர்க்கட்சி வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்! மனுஷன் என்ன சொல்லிருக்கார் பாருங்க

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் காலத்தில் எதிர்க் கட்சியான திமுக இணையத்தில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி இருப்பது ஒருபுறம் இருக்க, தற்போது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கும் அளவிற்கு பிரச்சனையை கிளப்பியுள்ளது.

அதாவது கரூர் பகுதியில் திமுக வேட்பாளராக இருப்பவர்தான் செந்தில் பாலாஜி. இவர் திமுக தேர்தல் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பேசியபோது அரசு அதிகாரிகளை மிரட்டும் வகையிலும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராகவும் பேசியிருக்கிறார். இதனால் செந்தில்பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் பணிமனை திறந்து வைக்கும் போது பேசிய செந்தில்பாலாஜி, ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டவுடன் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள இருக்கும் தடைகள் அகலும் என்றும், இதை அதிகாரிகள் யாரும் தடுக்க மாட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரான பாபு முருகவேல் புகார் மனு கொடுத்துள்ளார்.

MK Stalin- senthil balaji
MK Stalin- senthil balaji

மேலும் அந்த புகாரில் முருகவேல், செந்தில் பாலாஜி பிரச்சாரத்தின்போது அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியது கண்டிக்கத்தக்கது என்றும், நீதிமன்றம் உத்தரவு தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றாமல் மக்களைத் தூண்டும் வகையில் செந்தில்பாலாஜி பேசியதாகவும், இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று   வலியுறுத்தி தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்திருக்கிறாராம்.

எனவே தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கும் இந்த நிலையில் திமுக மாறி மாறி இவ்வாறு சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருப்பது பலரை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

- Advertisement -