கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக நாட்கள் ஓடிய ஒரே மலையாள படம் எது தெரியுமா.? 275 நாட்கள் ஓடி சாதனை

தமிழ் ரசிகர்கள் அதிகளவில் பிறமொழி படங்களை பார்கின்றனர் அதிலும் மலையாள மொழி முக்கியமாக பார்க்கப்படுகிறது. திரில்லர், ரொமான்டிக், டிராமா என்று அனைத்திலும் மலையாள ரசிகர்களின் பாராட்டை பெற்ற படங்கள் நிறைய உள்ளது.

மலையாள மொழியில் இது போன்ற படங்களை பொழுதுபோக்கிற்காக தமிழ் ரசிகர்களும் பார்த்து ரசிக்கின்றனர். தற்போது லாக் டவுன் சமயத்தில் கூட தமிழ் சினிமாவை விட மலையாளத்தில் ஹிட்டான அய்யபனும் கோஷியும், அஞ்சாம் பத்திரா, டிரான்ஸ், கப்பெல்லா, ஃபாரன்ஸிக், ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், டிரைவிங் லைசென்ஸ் போன்ற படங்களை பார்ப்பதில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

2015ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன், அனுபமா பரமசிவன், சிஜு வில்சன் போன்ற பிரபலங்கள் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது பிரேமம்.

இந்த படம் மலையாள ரசிகர்களை விட தமிழ் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. சாய்பல்லவி ஆசிரியராகவும், நிவின் பாலி காலேஜ் ஸ்டூடண்டாக நடித்திருப்பார். ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர் மத்தியில் இன்றும் கைதட்டலை வாங்கிக் கொண்டு தான் இருக்கின்றது.

premam
premam

இந்த படம்‌ கேரளாவில் 175 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது, ஆனால் அதையும் தாண்டி சென்னையிலே 275 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சுவாரசியமான சம்பவம் என்னவென்றால் இந்த படத்தின் மூலம் 17 நடிகர்களை மலையாள சினிமாவுக்கு அடையாளம் கண்டு உள்ளனர். தற்போது வரை அவர்கள் சிறந்த கதாபாத்திரங்களை தேடி நடித்தும் வருகிறார்கள்.