சூப்பர் ஸ்டாரை வைத்து 24 படங்கள் எடுத்த ஒரே இயக்குனர்.. தரமான ஹிட் லிஸ்ட்

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர் இவர் கிட்டத்தட்ட 75 படங்கள் இயக்கியுள்ளார். இவர் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற பிரபல நடிகர்களுக்கு ஹிட் கொடுத்துள்ளார். பெரும்பாலான படங்கள் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளது.

அப்படிப்பட்ட இயக்குனர் எஸ்பி முத்துராமன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 24 படங்களை இயக்கியுள்ளார். ஒரே இயக்குனர் அதிக படங்களை ஒரே நடிகரை வைத்து இயக்கியுள்ளார் என்ற பெருமை இவர்களையே சேரும். ரஜினிகாந்துடன் பணியாற்றியதில் மிகவும் வசதியாகவும், பழகுவதற்கு மிகவும் இலகுவானவர் என இயக்குனர் முத்துராமன் கூறியிருந்தார்.

20 ஆண்டு காலங்களில் புவனா ஒரு கேள்வி குறி, ஆடு புலி ஆட்டம், பிரியா, ஆறிலிருந்து அருபது வரை, முரட்டுக்காளை, கழுகு, நெற்றிக்கண், ராணுவ வீரன், போக்கிரி ராஜா, புதுக்கவிதை, எங்கேயோ கேட்ட குரல், பாயும் புலி, அடுத்த வாரிசு.

நான் மகான் அல்ல, நல்லவனுக்கு நல்லவன், ஸ்ரீ ராகவேந்திரா, திரு பரத், வேலைக்காரன், மனிதன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன்,ராஜா சின்ன ரோஜா, அதிசய பிறவி, பாண்டியன் ஆகிய 24 படங்கள் ரஜினியை வைத்து எஸ்பி முத்துராமன் இயற்றியுள்ளார்.

இதில் ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் 6 வயதில் குடும்ப பாரத்தை சுமக்கத் துவங்கி, 60 வயதில் மரணத்தை சந்திக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதை. இப்படத்தில் ரஜினி, வாழ்க்கையில் எல்லாவிதமான கஷ்டங்களையும் சந்திக்கும் ஒரு மனிதராக நடித்திருந்தார்.

ரஜினி கேரியரில் ஒரு மைல்கலாக இந்த படம் அமைந்தது. ரஜினியை மாஸ் ஹீரோவாக காட்டிய படமும் இதுதான். இப்படத்திற்காக ரஜினி ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றார். இப்படத்தில் துயரத்தை தாங்கி நிற்கும் ரஜினியின் நண்பனாக சோ நடித்திருந்தார். நட்பின் காரணமாக ரஜினி, சோ இருவரும் நிஜ வாழ்க்கையிலும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்