வசூலில் சாதனை படைத்த டாஸ்மார்க்.. தமிழ்நாட்டு குடிமக்களால் ஒரே நாளில் இத்தனை கோடி வருமானமா.?

தமிழ்நாட்டில் தற்போது பல சிக்கல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பலரும் மதுபானத்திற்கு அடிமையாகி உள்ளது தான் வேடிக்கையாக உள்ளது.

கொரோனா காலத்தில் கூட எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மது பிரியர்கள் அவருக்கு வேண்டிய மதுபானத்தை மட்டும் தான் விரும்பி வருகின்றனர்.

சமீபகாலமாக கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார துறையினரும், மருத்துவர்களும் படாதபாடுபட்டு வரும் நிலையில் மது பிரியர்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.

tasmac
tasmac

மே 1ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளும் விடுமுறை என்பதால் மது பிரியர்கள் நேற்று தேவையான மதுபாட்டில்களை வாங்கி வைத்துள்ளனர். அதுவும் நேற்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டில் மொத்தம் 292 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்று உள்ளன.

அதுவும் சென்னையில் 63.44 கோடி ரூபாய் விற்றுள்ளது. திருச்சியில் 56.72 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. இதுவரைக்கும் நேற்று மட்டும் தான் அதிகமாக விற்பனையாகியுள்ளன.

இதன் வேடிக்கை என்னவென்றால் மதுபாட்டில்கள் வாங்குவது தவறில்லை, ஆனால் பலரும் முக கவசம் அணியாமல் கொரோனா தொற்று கவலைப்படாமல் இருப்பது தான் கவலையாக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்