ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பாலுமகேந்திரா உட்பட 2 பெரிய ஜீனியஸ் இயக்கத்தில் நடித்த ஒரே நடிகர்.. இனிமேல் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு

தமிழ் சினிமாவை புதுகண்ணோட்டத்தோடு பார்த்தவர்கள் பாலு மகேந்திரா, கே பாலசந்தர், மகேந்திரன். 3 பேரும் பெரிய ஜீனியஸ், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு.

இவர்கள் 3 பேரின் இயக்கத்தில் நடித்த ஒரே நடிகர் என்று தமிழ் நடிகர் ஒருவரை கூறலாம். கேரளாவில் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பிரதாப்போத்தன் தான் அந்த நடிகர்.

ராதிகாவை காதலித்து திருமணம் செய்தவர் பிரதாப்போத்தன். இவர் கேரளாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய கோடீஸ்வரர்களில் ஒருவர். இவர் பல படங்களை தமிழில் தயாரித்த கோடீஸ்வரர், ஹரி போத்தனின் உடன் பிறந்த சகோதரர்.

பிரதாப் போத்தன் கேரளாவில் பிறந்ததால் மலையாளம் கலந்த தமிழில் தான் பேசுவார் . இவர் தன்வசம் மூன்று இமாலய இயக்குனர்களுடன் நடித்த  ஒரு சாதனையை வைத்திருக்கிறார்.  இவர் மூடுபனி, வறுமையின் நிறம் சிகப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே என அவர்கள் இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படி இவர்கள் மூவருடனும் எந்த நடிகரும் இன்றுவரை நடித்ததில்லை.

பிரதாப் போத்தன் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய ஏற்ற, இறக்கங்களை சந்தித்து உள்ளார். இவர் 2 முறை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக ராதிகாவை திருமணம் செய்த இவர், அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஹரி போத்தன் மற்றும் பிரதாப் போத்தன் இவர்கள் இருவரும் தயாரிக்கும் படங்களின் சூட்டிங் எங்கே நடந்தாலும் அங்கே இருப்பார்களாம். காலையிலேயே அசைவ உணவுகளை நடிப்பவர்களுக்கு வாரி வழங்குவது இவர்கள் பழக்கமாம். காசை பற்றி கொஞ்சம் கூட கவலை பட மாட்டார்களாம்.

- Advertisement -

Trending News