சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஜய்யிடம் சிபாரிசுக்கு சென்ற வாரிசு நடிகை.. மார்க்கெட் இழந்ததால் பரிதவிக்கும் நிலை

விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை சீக்கிரம் நடித்து கொடுத்துவிட்டு கொஞ்சம் ரிலாக்சேஷன் எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஏனென்றால் இப்படத்திற்காக அதிக அளவில் காஷ்மீரில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டதால் குளிரில் மிகவும் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.

இப்பொழுது இந்த படப்பிடிப்பு காஷ்மீரில் முடிந்த பிறகு சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் இவருடன் சேர்ந்து நடித்த நடிகை ஒருவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தமிழில் அதிகமாக தலை காட்டவில்லை. இதற்கு காரணம் அவர் வேறு மொழி படங்களில் ஆர்வம் காட்டி நடிக்க சென்றதால் தான்.

Also read: விஜய்க்கு கனகச்சிதமாக பொருந்திய 5 நடிகைகள்.. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இடுப்பழகி சிம்ரன்

அதே மாதிரி அங்கே பிசியாக நடித்து வந்த நிலையில் அந்த படங்கள் அனைத்தும் ரிலீஸாகியும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் இவரை கைவிட்டு விட்டது. அதனால் மீண்டும் தமிழ் பக்கம் வந்து நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார். அப்படி வந்த பொழுது இவர் எதிர்பார்த்த மாதிரி தமிழில் எந்த பட வாய்ப்பு இல்லாததால் மிகவும் பரிதாபமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் வேறு வழி இல்லாமல் பெரிய இடத்து சிபாரிசு இருந்தால் நிச்சயமாக ஏதாவது ஒரு பட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையில் விஜய்யிடம் சிபாரிசு செய்யுமாறு கேட்டு வருகிறார். அவரும் லியோ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நிலையிலும் இந்த அம்மணி கேட்டுக் கொண்ட உடனே இதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.

Also read: பதற வைத்த நிலநடுக்கம், லியோ டீம் எப்படி இருக்கு? தயாரிப்பாளர் போட்ட ட்வீட்

அந்த நடிகை வேறு யாருமில்லை விஜய்யுடன் பைரவா படத்தில் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தான். இவர்கள் ஜோடி பொருத்தம் நன்றாகவே இருந்ததால் இவர்கள் அடுத்ததாக சேர்ந்து சர்க்கார் என்ற படத்தில் நடித்து அந்த படத்தையும் ஹிட் கொடுத்திருக்கிறார்கள். அத்துடன் இவர் பெயர் கொஞ்சம் விஜய்யுடன் சேர்ந்து டேமேஜ் ஆனது. அதனாலயே கொஞ்சம் மற்ற மொழி படங்களில் நடிக்கப் போய்விட்டார்.

தற்போது இவருக்கு ஒரு பிரச்சனை என்றதும் முதலில் தஞ்சம் அடைந்தது விஜய் இடம் தான். இவருக்காக தான் விஜய்யும் பெரிய இடத்தில் சிபாரிசு கேட்டிருக்கிறார். ஆனாலும் ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாக இருந்த இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று நினைக்கும் போது பரிதாபமாக தான் இருக்கிறது.

Also read: அரசனை நம்பி புருஷனை கைவிட்ட சோக கதை.. விஜய் படத்தை நம்பி அதல பாதாளத்தில் விழுந்த மகேஷ் பாபு

- Advertisement -

Trending News