சின்னத்திரைக்கு வந்த ஆன்ட்டி நடிகை.. வாய்ப்பில்லாமல் தவிக்கும் பழைய ஐட்டம் டான்ஸர்

ஆரம்பத்தில் துணை கதாநாயகியாக வலம் வந்த நடிகை தற்போது பெரிய திரையில் வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார். தொடக்கத்தில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு, துணை நடிகை என்றால் இவர் மட்டும்தான் சரியாக இருப்பார் என்று இவர் கால்சீட் இல்லாமல் அலைந்த காலமும் உண்டு.

ஆரம்பத்தில் கதைக்கு முக்கியத்துவமான காட்சிகளில் நடித்தாலும், அதன்பின் நடிகைக்கு கிடைத்தது என்னமோ கவர்ச்சி வேடங்கள் தான்.பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்த நடிகை அதன்பின் சற்று ஒய்ந்து விட்டார்.

எப்பொழுதுமே பெரிய ஹோட்டல்களில், பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் அந்த நடிகையை பலர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். நடிகை அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வாய்ப்பு கிடைத்தால் போதும், சில நேரங்களில் இப்படியும் வாய்ப்பை பெறலாம் என்ற ஐடியாவில் இருந்தார்.

பிரபல காமெடி நடிகர் ஒருவர் நடிகையை நீண்டகாலமாக தன் பிடியில் வைத்திருந்தார். அதன்பின் அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, அந்த நடிகர் பிடியில் இருந்து வெளிவந்த நடிகை மீண்டும் ஒரு, சில படங்களில் தலை காட்டினாலும் தொடர்ந்து நடிக்கவில்லை.

இடையில் இந்த நடிகை சினிமா பிரபலம் ஒருவர் மீது மீ-டூ புகார் அளித்தாலும் அதற்கு தகுந்த ஆதாரம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாமல் பெயரைக் எடுத்துக்கொண்டது அவருக்கு பெரிய அடியாக அமைந்தது. இனிமேல் இப்படி இருந்தால் சரி வராது ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்த நடிகை அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆனார்.

தற்போது கொஞ்சம் வயதானதால் பெரிய திரையில் அம்மணிக்கு ஏற்ற வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரையில் நடித்து வருகிறார். அங்கேயும் பிரச்சனை இல்லாமல், வாழ்க்கையை ஓட்டினால் சரி என்று கோடம்பாக்கம் சலசலத்து வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்