சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் ஓகே.. விஜயகாந்தை அசிங்கப்படுத்திய ஹீரோயின்

ரசிகர்களால் கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் இப்போது நடிக்காவிட்டாலும் திரையுலகில் அவருக்கான இடம் அப்படியே தான் இருக்கிறது. இப்போது கூட அவருடைய படங்களை டிவியில் போட்டால் பார்த்து ரசிகாத ரசிகர்களே இருக்க முடியாது. இப்படி சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு ஹீரோவாக தான் இருந்திருக்கிறார்.

அப்படிப்பட்டவரை ஒரு நடிகை அவமானப்படுத்தி இருக்கிறார் என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது. ஆனால் அதுதான் உண்மை. விஜயகாந்த் கருப்பாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக பிரபல நடிகை ஒருவர் அவருடன் ஜோடி சேர மறுத்திருக்கிறார். 80 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை நதியா.

Also read: ரஜினி மகளுடன் சண்டையா?. லால் சலாம் படத்திலிருந்து விலகிய முக்கிய பிரபலம்

குறுகிய காலம் தான் என்றாலும் இவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இன்னும் சொல்லப்போனால் அந்த காலத்தில் இவர் அணிந்திருக்கும் உடை, ஹேர் ஸ்டைல் என அனைத்தும் பிரபலமாக இருந்தது. அதனாலேயே பல நடிகர்களும் இவருடன் ஜோடியாக நடிக்க விரும்பினார்கள். ஆனாலும் இவர் தனக்கான கதைகளை பார்த்து பார்த்து தான் தேர்வு செய்வாராம்.

அதேபோன்று இவருடைய திரைப்படங்களில் தேவையில்லாத காதல் காட்சிகள், கவர்ச்சி போன்ற எதுவும் இருக்காது. ஒருமுறை இவருக்கு விஜயகாந்த் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் கருப்பு என்ற காரணத்தினால் இவர் அந்த வாய்ப்பை உதாசீனப்படுத்தி இருக்கிறார். இதனால் கடுப்பான விஜயகாந்த் நடிகை சோபனாவை தனக்கு ஜோடியாக நடிக்க வைத்து அந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்கி இருக்கிறார்.

Also read: மணிரத்னத்திற்காக விட்டுக் கொடுத்த ரஜினி.. பரபரப்பை கிளப்பிய ஜெயிலர் அப்டேட்

இப்படி விஜயகாந்துடன் நடிக்க மறுத்த நதியா ரஜினிக்கு ஜோடியாக மட்டும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். ஏனென்றால் அப்போது சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் புகழின் உச்சியில் இருந்த ரஜினியுடன் நடிக்க பல நடிகைகளும் போட்டி போட்டு வந்தனர். அதனாலேயே நதியா அந்த வாய்ப்பை விடாமல் அவருடன் ஜோடி போட்டு நடித்தார். அது மட்டுமல்லாமல் அவருடன் நடிக்க மறுத்தால் தேவையில்லாத பிரச்சனையை சந்திக்க வேண்டும் என்ற ஒரு காரணமும் இருந்தது.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாகவும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் அவருடைய திரைப்படங்களில் முத்த காட்சிகள் இருக்கும் என்ற ஒரே காரணத்தினால் இவர் அந்த வாய்ப்புகளை ஏற்க வில்லையாம். இப்படி தனக்கென ஒரு கொள்கையுடன் நடித்த நதியா நடிக்க வந்த சில வருடங்களிலேயே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனது குறிப்பிடத்தக்கது.

Also read: விழி பிதுங்கி நிற்கும் நெல்சன்.. ஜெயிலர் படத்தில் கோர்த்துவிடும் ரஜினி

- Advertisement -spot_img

Trending News