ஹாரரும் இல்ல, காமெடி இல்ல.. அனல் பறக்கும் ஓ மை கோஸ்ட் படத்தின் ஸ்டோரி ரிவியூ

இயக்குனர் யுவன் இயக்கத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழ் நடிகர்களான சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா, ஜிபி முத்து உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஓ மை கோஸ்ட் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகுவதால் திரையரங்கில் அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் ஆர்வத்துடன் படத்தை பார்க்க வருகின்றனர்.

இதில் ஒரு கிராமத்தில் ஆண்களை துன்புறுத்தும் பெண் கோஸ்ட் ஒன்று சுற்றுகிறது. அதை கட்டுப்படுத்த கதாநாயகன் சதீஷ் வந்தால் மட்டுமே முடியும் என மந்திரவாதி சொல்கிறார். இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் ஓ மை கோஸ்ட் படத்தின் முழு கதை.

Also Read: 5 மொழிகளில் தயாராகும் சன்னிலியோனின் முதல் தமிழ் படம்.. விட்டா நயன்தாராவுக்கு சவால் விடுவாங்க போல!

அரசர் காலத்தில் அனகோண்டாபுரம் என்ற பகுதியில் சன்னி லியோன் இளவரசியாக ஆட்சி செய்து வருகிறார். அரசராக தன்னுடைய தந்தை செயல்பட்டதால், அவருடைய செயல்பாடு பிடிக்காத காரணத்தால் ஆண்களையே சன்னி லியோன் வெறுக்கிறார். அதனால் அந்த ஊரில் இருக்கும் ஆண்களை அரண்மனைக்கு வர வைத்து அடித்து துன்புறுத்துகிறார்.

இதனால் கோபம் கொள்ளும் யோகி பாபு சூழ்ச்சி செய்து சன்னி லியோனை கொன்று விடுகிறார். இதன்பின் பல ஆண்டுகள் கடந்தாலும் பேயாக வந்து அந்த கிராமத்தில் வசிக்கும் ஆண்களை வெறிகொண்டு துன்புறுத்துகிறார். இந்த பேயை சென்னையில் வசிக்கும் கதாநாயகன் சதீஷ் எப்படி கட்டுப்படுத்துகிறார் என்பதை திரைக்கதையாக அமைத்திருக்கின்றனர்.

Also Read: பிட்டு துணி இல்லாமல் தொப்பியை வைத்து மறைத்த சன்னி லியோன்.. ஆட்டம் கண்ட இணையதளம்!

இதில் முதல் பாதியில் சதீஷ் சினிமாவில் இயக்குனராகுவதற்கு முயற்சிக்கிறார். அவருடன் ரமேஷ் திலக் பயணிக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாய் ஒரு பேயின் கட்டுப்பாட்டுக்குள் இருவரும் சென்று விடுகின்றனர். அந்த பேய் அவர்களை அமானுஜம் நிறைந்த அனகோண்டாபுரத்திற்கு அழைத்துச் செல்கிறது.

அப்போது என்ட்ரி கொடுக்கும் தர்ஷா குப்தா ஹாரருடன் கலந்த காமெடியில் ரசிகர்களை கட்டிப் போடுகிறார். அதன் பின் இரண்டாம் பாதியில் சன்னி லியோனுக்கு காட்சிகள் குறைவாக தான் இருக்கிறது. இருப்பினும் தொடக்கத்தில் சன்னி லியோனின் என்ட்ரி மற்றும் அவருடைய காஸ்ட்யூம் பலரையும் பிரமிக்க வைக்கிறது. U சர்டிபிகேட் பெற்ற இந்த படத்தில் ஓரளவு ஹாரர் மட்டுமே இருப்பதால் சிறுவர்களும் பார்க்கக் கூடிய வகையில் தான் இருக்கிறது.

Also Read: சன்னி லியோன் படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. சபாஷ் சரியான போட்டி என கூறும் ரசிகர்கள்

மேலும் சன்னி லியோன் நடித்திருப்பதால் கவர்ச்சி தாறுமாறாக இருக்கும் என நினைத்துக் கொண்டு திரையரங்கு வராமல் இருக்கும் ரசிகர்களின் எண்ணம் தவறானது என்றும் படத்தை பார்த்த பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தப் படத்தை காமெடி கலந்த ஹாரர் படம் என சொல்கின்றனர். ஆனால் காமெடியும் இல்லை ஹாரரும் இல்லை என ரசிகர்கள் ஓ மை கோஸ்ட் படத்தை வச்சு செய்கின்றனர்.

இருப்பினும் சன்னி லியோன் ரசிகர்களை கவர்ச்சியில் கைவிட்டாலும் ஒரு கோஸ்ட் ஆக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இதனால் நிச்சயம் இனி தமிழ் சினிமாவில் சன்னி லியோன் ஒரு ரவுண்டு கட்ட வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில் ஒரு முறை பார்க்கக்கூடிய படமாக தான் ஓ மை ஹோஸ்ட்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2/5