வலிமை ரிலீஸ் தேதியுடன் போஸ்டர் வெளியிட்ட போனிகபூர்.. 4 மொழிகளில் வெளியீடு

இதுவரை அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த வலிமை ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக இழுபறியில் இருந்த வலிமை படம் இப்பொழுது வெளியாக உள்ளது.

அஜித் முதல் போனி கபூர் வரை அரசாங்கம் அறிவித்த கொரோனா லாக் டவுன் காரணமாக என்ன செய்வது என்று பல நாள் யோசித்து விழிபிதுங்கி நின்றனர். தற்போது வலிமை படத்திற்கான ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது.

கொரோனா மூன்றாவது அலை கட்டுப்பாட்டிற்குள் வந்ததால் அரசாங்கம் வெகுவிரைவில் திரையரங்குகளில் 100 சதவீதம் அனுமதி அளிக்க உள்ளது. இதனால் வலிமை படத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிந்த படக்குழு ஒரு தேதியை அறிவித்து அதில் படத்தை ரிலீஸ் செய்வதற்காக முழுமூச்சில் வேலை செய்து கொண்டிருக்கிறது.

இன்று அதிகாரப்பூர்வமாக அந்த அறிவிப்பு வெளியானது. பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை படத்தை அனைத்து நாடுகளிலும் வெளியிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் அளித்தது படக்குழு.

Valimai
Valimai

அஜித் ரசிகர்கள் இதனைக் கேட்டு ஆர்ப்பரித்து வருகின்றனர். வலிமை ஃபீவர் இன்றிலிருந்து ரசிகர்களை தொற்றிக் கொண்டு வருகிறது. படக்குழுவினர் போர்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து வருகின்றனர்.

ஏற்கனவே இப்படத்தின் டிரைலர் வெளியாகி சக்கை போடு போட்டது. அஜித் இன்வெஸ்டிகேஷன் பண்ணுகிற மாதிரி காட்சிகள் வருகின்றன. இன்வெஸ்டிகேஷன் படம் என்றால் தமிழ் சினிமாவின் கட்டாயமாக ஹிட் என்கிறார்கள். அஜித் போனிகபூர் கூட்டணியில் அடுத்த பிளாக்பஸ்டர் ரெடி என்கிறார்கள் ரசிகர்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்