நில அபகரிப்புக்கு பெயர் போனவர்கள் எதிர்க்கட்சியினர்.. முதல்வரின் காரசாரமான பிரச்சார பேச்சு!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தனது கட்சியான அதிமுகவின் சார்பாக ஊர் ஊராக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே இவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையாலும்  நலத்திட்டகளாலும் மக்கள் மனம் குளிர்ந்து உள்ளதால் போகுமிடமெல்லாம் முதல்வருக்கு அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஏனென்றால் சமீபத்தில் இவர் வெளியிட்ட விவசாய பயிர் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, குலவிளக்கு திட்டம், நெசவாளர்களுக்கான நலத்திட்டங்கள், இளைஞர்கள் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் என பல நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்து ஏழை எளியோரை மகிழ்ச்சியைக் திளைக்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் கரூரில் நடந்த பிரச்சாரத்தின்போது முதல்வர் திமுகவினரை காரசாரமாக விளாசி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது திமுகவில் உள்ள ஆண்கள் நில அபகரிப்புக்கு பெயர் போனவர்கள் என்று கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது முதல்வர் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ‘திமுக என்றாலே நில அபகரிப்பு என்று பொருள். உங்களிடம் கரூரில் சில விலையுயர்ந்த நிலம் இருந்தால் அதை டிஎம்கே ஆண்களிடமிருந்து மறைத்து விடுங்கள். ஏனென்றால் உங்கள் தொகுதியில் டிஎம்கே வெற்றி பெற்றால் உங்கள் சொத்துக்கள் அனைத்தும் அவர்களுடையது ஆகிவிடும். இதற்கு சான்று ஏற்கனவே டிஎம்கே மக்களிடமிருந்து 16 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அபகரித்து தான்’ என்று தெரிவித்ததோடு, எங்களுடைய அம்மா அரசு அதை திரும்ப மக்களுக்கு  கொடுத்திருக்கிறது என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் குடிமக்களிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் ஒரே கட்சி திமுக தான் என்றும், அவர்கள் அபகரிக்கும் நிலத்தை மீட்டுக் கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்றும்  எடப்பாடியார் பேசியிருக்கிறார்.

Next Story

- Advertisement -