அணியில் ஆதரவில்லை.. 29 வயதில் கண்ணீருடன் ஓய்வு முடிவை அறிவித்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்

29 வயதிலேயே தனது ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார் தென்ஆப்பிரிக்கா வீரர். சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி அணி நிர்வாகத்திடம் மாட்டிக்கொண்டு, மன்னிப்புக் கேட்டு மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியிலிருந்து தென்ஆப்பிரிக்க அணி நிர்வாகம் அவர் மீது ஒரு கண் வைத்துள்ளது. எதற்கும் ஒத்துப்போக மறுக்கிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

கருப்பின பிரச்சினையை கையில் எடுக்கும் விதமாக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து மண்டியிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அந்த வீரர், நான் எதற்கு மண்டியிட வேண்டும், எனக்கு இதில் உடன்பாடு இல்லை என சர்ச்சை கருத்துகளை தெரிவித்து, மண்டியிட மறுத்துவிட்டார்.

இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய பிரச்சனையை கிளப்பியது. 29 வயதே ஆன குயின்டன் டி காக் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான இவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிரடி ஆட்டம் ஆடி நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்தவர்.

குயின்டன் டி காக் 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,300 ரன்களை குவித்துள்ளார். இதில் 6 சதங்களும் அடங்கும். இந்நிலையில் திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ள 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து முதலில் விலகுவதாக இருந்த டி காக், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மொத்தமாக ஓய்வு பெற்றுள்ளார். இதன்மூலம் அணி நிர்வாகம் அவருக்கு போதிய ஆதரவளிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்