சிவகார்த்திகேயன் மாதிரி வளர முடியாமல் போன நண்பர்.. விஜய் டிவி கை கொடுத்தும் பிரயோஜனம் இல்லை

விஜய் டிவியை ஒரு படியாய் வைத்து இன்று சிவகார்த்திகேயன் எல்லா படியையும்  கடந்து உச்சாணிக் கொம்பில் இருக்கிறார். விஜய், அஜித்துக்கு அடுத்த வரிசையில் ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறார். சிவகார்த்திகேயன் குறுகிய காலகட்டத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பது முன்னணி நடிகர்களையே கொஞ்சம் அசர வைத்துள்ளது.

அதேபோல் விஜய் டிவியில் இருந்து வந்த பல நடிகர்கள் இன்று நல்ல ஒரு நிலைமையில் இருக்கிறார்கள். சுவாமிநாதன், ஜீவா போன்றவர்கள் விஜய் டிவியில் இருந்து தான் வெள்ளித்திரைக்கு வந்து சாதித்துக் காட்டியுள்ளனர். அதிலும் காமெடியில் இப்பொழுது சுவாமிநாதன் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Also Read: சிவகார்த்திகேயனின் ரோல் மாடல் யாரு தெரியுமா.! அவரின் அசுர வளர்ச்சிக்கு அடித்தளமே இவர்தானாம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபராகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை மிகவும் சக்ஸஸ்புள் ஆக கொண்டு செல்வதில் மாகாபா ஆனந்த் பெரும் பங்கு வகிக்கின்றனர். ஆனால் இவருக்கு வெள்ளித்திரையில் லக் இல்லை என்றே கூற வேண்டும். நல்ல டைமிங் காமெடி அடிக்கும் சென்ஸ் உள்ளவர் இவர். சினிமாவில் ஏனோ இவர் ஜம்பம் பலிக்கவில்லை.

விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்த மா கா பா ஆனந்த் மட்டும் வெள்ளித்திரையில் ஒரு முழுமையான வளர்ச்சி பெற முடியாமல் திணறி வருகிறார். ஆனந்திற்கு சின்னத்திரை கை கொடுத்தது போல் வெள்ளித்திரை கைகொடுக்கவில்லை. இவரும் தனக்கு செட் ஆகக்கூடிய எல்லா விதமான கதைகளையும் தேர்வு செய்து நடித்து விட்டார்.

Also Read: எங்களுக்கு தோண்டிய குழியில நீயே விழுந்துட்ட.. மேடையில் சிவகார்த்திகேயனை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்

வானவராயன் வல்லவராயன் திரைப்படம் மூலம் தமிழ்சினிமாவில் காலடி எடுத்து வைத்த ஆனந்த் நவரச திலகம், கடலை, மீசையை முறுக்கு, அட்டி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் எந்த ஒரு படமும் இவருக்கு ஓடவில்லை.

தமிழில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களில் 5 முதல் 6 படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கென்று வெள்ளித்திரையில் ஒரு நிரந்தர அடையாளம் இல்லாமலேயே போய்விட்டது. தற்போது இவர் மீண்டும் விஜய் டிவிக்கு வந்துவிட்டார். இவர் 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் சினிமாவை கைவிட்டுவிட்டார்.

Also Read: 2 மடங்கு சம்பளம் கேட்ட சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. பழம் நழுவி வாயில் விழுந்தும் புண்ணியம் இல்ல

- Advertisement -