வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

லோகேஷின் LCU கதையில் இனி விஜய் கிடையாது.. லியோ விமர்சனத்தினால் அதிருப்தியான தளபதி

Vijay and Lokesh in Leo: சினிமாவில் இதுவரை இல்லாத புதுமையான விஷயத்தை கொண்டு வந்து அனைவருடைய கவனத்தையும் பெற்றவர் லோகேஷ். அதற்கு காரணம் இவருடைய LCU கதை தான். முக்கால்வாசி இவர் எடுக்கக் கூடிய படங்கள் அனைத்திலும் ஏதாவது ஒரு ட்விஸ்ட்டை வைத்து அடுத்த படத்திற்கு அதை கொண்டு வருவார். அதனாலேயே இவருடைய படங்கள் மிக சுவாரசியமாக மக்களை கவர்ந்து விட்டது.

அப்படி இவருடைய கூட்டணியில் விஜய் இரண்டாவது முறையாக நடித்த படம் தான் லியோ. இப்படம் ரிலீசுக்கு முன்பே ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்பை வைத்தார்கள். அதே மாதிரி திரையரங்களில் வந்த பிறகும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் தான் லியோ படம் அமைந்திருக்கிறது. ஆனாலும் பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் எதிர்மறையான விமர்சனங்களும் வந்து கொண்டே இருக்கிறது.

இதற்கிடையில் இப்படத்தை ரிலீஸ்க்கு முன்னாடியே விஜய் பார்த்துவிட்டு அந்த அளவிற்கு திருப்தியாக இல்லாததால் லோகேஷ் இடம் அப்படியே விலகி இருக்கிறார். அதற்கு காரணம் லியோ படத்தின் கதை லோகேஷ் சொல்லும் போது நன்றாக இருந்ததாம். ஆனால் படத்தைப் பார்த்ததும் விஜய்க்கு பிடிக்கவில்லை. இதனால் லோகேஷ் கூட ஒழுங்காக பேசாமல் ஒதுங்கி விட்டார்.

இதனைத் தொடர்ந்து இவருடைய அடுத்த படமான தளபதி 68 படத்தில் நடிப்பதற்கு வெங்கட் பிரபுவுடன் போய் சேர்ந்து விட்டார். அத்துடன் தற்போது இவர் எடுத்திருக்கும் முடிவு என்னவென்றால் இனிமேல் லோகேஷ் உடன் அடுத்து எந்த படங்களிலும் இணைய கூடாது என்று முடிவில் இருக்கிறாராம்.

அதனால் இனிமேல் லோகேஷ் LCU கதையில் விஜய் கிடையாது. இதை திட்டவட்டமாக விஜய் முடிவு பண்ணி இருக்கிறார். ஆனால் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத லோகேஷ் தற்போது ரொம்பவே அதிர்ச்சியில் இருக்கிறாராம். ஏனென்றால் லியோதாஸ் இல்லாமல் LCU கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத ஒரு சூழலில் லாக் ஆகி இருக்கிறார்.

ஒருவேளை லோகேஷ் அவருடைய அதீத மூளையை பயன்படுத்தி விஜய் இல்லாமல் LCU கதைக்கு எண்டு கார்டு போட்டால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் லியோ படம் இந்த அளவிற்கு ஒரு சம்பவத்தை செய்யும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்த அளவிற்கு அதிருப்தியான விமர்சனத்தை கொடுத்திருக்கிறது. இதையெல்லாம் ஓவர் டேக் பண்ணி லோகேஷ் வெளிவந்தால் அடுத்தடுத்து அவருக்கு வெற்றி கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

Trending News