எந்த மொழியா இருந்தாலும் ஒரே டேக் தான்.. சிவாஜியையே மிரள விட்ட நடிகை

கலைஞர்களை பொறுத்தவரை தன்னுள் இருக்கும் திறமைகளை வெளிக்காட்டியே வாய்ப்புகளை பெறுகின்றனர். அவ்வாறு தன்னிடம் இருக்கும் பன்முக திறமைகளை கொண்டு புகழின் உச்சியில் இருந்தவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இத்தகைய ஜாம்பவானையே மிரள வைத்த பெருமை கொண்ட நடிகையை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தனக்கு கிடைத்த வாய்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்று நடிக்கும் வல்லமை கொண்டவர் நடிகை மனோரமா. தன்னை ஒரு குணச்சித்திர நடிகை ஆக அடையாளப்படுத்திக் கொண்டவர். சக கலைஞர்களே பொறாமை படக்கூடிய பெருமையை கொண்டவர்.

Also Read: உதயநிதிக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்.. செய்வதறியாமல் இருக்கும் ரெட் ஜெயண்ட்

தனக்கு கொடுக்கக்கூடிய வசனத்தை கூட படிக்கத் தெரியாதவர். ஆனால் அவற்றை பிறர் கூற கேட்டு பேசி நடிக்கும் வல்லமை கொண்டவர். மேலும் கதையின் வசனம் வட்டார மொழியில் இருந்தாலும் சரி, கொங்கு தமிழாக இருந்தாலும் சரி அனைத்திலும் தன் திறமையை வெளிக்காட்டியவர் மனோரமா.

நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் இவரின் உச்சரிப்பு நான் பெரிதும் பேசப்பட்டது. இத்தகைய பெருமை வாய்ந்த இவர் எந்த ஒரு கர்வமும் காட்டாமல் தன் எளிமையான நடிப்பை வெளிக்காட்டுவாராம். மேலும் எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் அதை சிங்கிள் டேக்கில் முடித்து கொடுத்து விடுவாராம்.

Also Read: வில்லனாய், ரஜினியை குடைச்சல் கொடுத்த நடிகர்.. பொறாமை பட வைத்த நாசர்

இவர் பேசும் உச்சரிப்பை கண்டு வியந்து போனவர்களில் சிவாஜியும் ஒன்று. மேலும் இவரின் சிங்கிள் டேக் வசனத்தை கண்டு சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட்கள் மிரண்டே போவார்களாம். இவரின் வசனத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறும் சக நடிகர்களுக்காக திரும்பவும் முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுப்பாராம்.

இது போன்ற தற்பெருமை இல்லாத குணத்தால் தமிழ் சினிமாவில் நீங்காத இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்கள் விரும்பும் நடிகையாக அன்றும் இன்றும் நம் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். இத்தகைய கலைஞரை தமிழ் சினிமா இழந்தது என்பது தான் வருத்தத்துக்குரியது.

Also Read: அப்பா வயது நடிகருடன் ஜோடி போடும் மில்க் பியூட்டி நடிகை.. 40 வயது வித்தியாசம் எல்லாம் ஓவரா இல்லையா!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்