வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

என்னதான் தளபதியா இருந்தாலும், சூப்பர்ஸ்டார் ஆகிட முடியுமா.. டைட்டில் பஞ்சாயத்தில் முற்றுப்புள்ளி வைக்காத விஜய்

இன்றைய தமிழ் சினிமாவின் விறுவிறுப்பான டாபிக் தான் ரஜினியின் சூப்பர்ஸ்டார் டைட்டிலை அடுத்து யாருக்கு கொடுப்பது என்பது தான். அது ஏன் சூப்பர்ஸ்டார் டைட்டிலுக்கு மட்டும் ஆளாளுக்கு சண்டை போடுகிறார்கள் என்ற கேள்வியும் வந்து, அதற்கும் விளக்கம் தரப்பட்டது. அந்த வகையில் 1978 ஆம் ஆண்டு பைரவி படத்தின் போது ரஜினிகாந்திற்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை அந்த பட்டத்திற்கு ஏற்றார் போல் ரஜினிகாந்தும் தனது படங்களின் கதை தேர்ந்தெடுப்பதிருந்து, 100 கோடி வசூல் வரை அந்த பட்டத்திற்கான அனைத்து வேலைகளையும் கட்சிதமாக செய்து வருகிறார். அந்த வகையில் சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு தற்போது ஆசைப்படும் ஒரே நடிகர் என்றால் நடிகர் விஜய் தான்.

Also Read: ராகவேந்திரா சாமிக்கு பின் சூப்பர்ஸ்டார் மதிக்கும் சாமி இதுதான்.. வெளிப்படையாக மேடையில் பேசிய ரஜினி

வாரிசு படத்தின் ஆடியோ லாஞ்சில் சரத்குமார் முதல் அப்படத்தின் தயாரிப்பாளர் வரை அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என பெருமையாக பேசினர். இதற்கு இன்று வரை மறுப்பு தெரிவிக்காமல் உள்ளார் விஜய். அந்த வகையில் விஜய்யும் அந்த பட்டத்திற்கு தற்போது மும்முரமாக ஆசைப்படுகிறார் என்ற சர்ச்சையும் கிளம்பிய நிலையில், நடிகர் அஜித்தை போல் ஏன் விஜய் எதுவும் செய்யாமல் உள்ளார் என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது.

நடிகர் விஜய் எப்படி இன்று தமிழ் சினிமாவின் அடையாளமாக உள்ளாரோ, அதே போல் தான் நடிகர் அஜித்தும் உள்ளார். இன்னும் சொல்லப்போனால் விஜயை விட அஜித்திற்கு இந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அந்த வகையில் அஜித்திற்கு கொடுக்கப்பட்ட அல்டிமேட் ஸ்டார், தல உள்ளிட்ட பட்டத்தை வைத்து தன்னை யாரும் அழைக்க வேண்டாம் என அவரே கூறிவிட்டார்.

Also Read:  விஜய்யிடம் சிபாரிசுக்கு சென்ற வாரிசு நடிகை.. மார்க்கெட் இழந்ததால் பரிதவிக்கும் நிலை

இருந்தாலும் ரசிகர்கள், தமிழ் சினிமாவின் ஒரே தல என்றால், அது அஜித் தான் என அவரை விட்டுக்கொடுக்காமல் உள்ளனர். அந்த அளவிற்கு அஜித் தனக்கு கொடுத்த பட்டதையே விட்டுக்கொடுக்கும் போது, விஜய் ஏன் ரஜினியின் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுகிறார் என்பதே பலரது கேள்வியாக உள்ளது. ஏன் இந்த விஷயத்துக்கு அஜித்தை போல அவர் முற்றுப்புள்ளி வைக்காமல் உள்ளார் என தற்போது பலரும் பேசி வருகின்றனர்.

சூப்பர்ஸ்டார் இடத்தை பிடிக்க வேண்டுமென்றால் அவரை போல பல படங்கள் பண்ணவேண்டும். விஜய் தற்போது வரை வெறும் 66 படங்களிலேயே நடித்துள்ளார். ஆனால் ரஜினியோ அவரது 50 வயதிலேயே 90 படங்களுக்கு மேல் நடித்து சாதித்தவர். அதிலும் 70 காலகட்டத்தில் 20 படங்களுக்கு மேல் ஒரு வருடத்திற்கு நடித்தவர். இப்படி விஜய், ரஜினி செய்த சாதனையை பார்க்காமல் அவரது பட்டத்திற்கு மட்டும் ஆசைப்படுவது நியாயம் இல்லாதது என்பதே பலரது கருத்தாக உள்ளது.

Also Read: முத்து படம் இல்லையென்றால் அஜித் இல்லை.. 27 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த ஏகேவின் வெற்றி ரகசியம்

- Advertisement -

Trending News