இப்போதைக்கு கல்யாணம் இல்ல.. அமீர்-பாவனி லிவிங் டுகெதர் சீக்ரெட் இதுதான்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்திரை தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமானவர் பாவனி. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற பாவனி இதே நிகழ்ச்சியில் வையல் கார்டு என்ட்ரியாக வந்த டான்ஸ் மாஸ்டர் அமீருடன் நட்பாக பழகி வந்தார். ஆனால் அமீருக்கு பாவனின் மீது காதல் ஏற்பட்டது.

அதன் பின்பு பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் அமீர், பாவனி இருவரும் சேர்ந்து நடனம் ஆடினர். இதன் மூலம் நெருங்கி பழகிய இருவரும் தற்போது காதலித்து வருகிறார்கள். மேலும் இவர்களுக்கு பட வாய்ப்பு குவிந்த வண்ணம் இருக்கிறது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் அமிர், பாவனி இருவரும் நடித்திருந்தனர்.

Also Read : காந்தாரா படத்தை வைத்து ஓட்டியதால் விலகும் சீரியல் பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு வைத்த பெரிய ஆப்பு

இந்நிலையில் இவர்கள் இருவருமே எங்கு சென்றாலும் ஒன்றாக தான் சுற்றி வருகிறார்கள். இப்போது பாவனி கல்யாணத்தைப் பற்றி ஒரு பேட்டியில் கூறி உள்ளார். அதாவது எங்கள் இடையே இருப்பது நட்பை தாண்டி காதல் என்பது சில நாட்களிலேயே புரிந்து விட்டது. இப்போது தான் சினிமாவில் தலை காட்ட ஆரம்பித்திருக்கிறோம்.

அடுத்தடுத்த ப்ராஜெக்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதை சரியாக திட்டமிடுதலின் பெயரில் வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதனால் திருமணத்திற்கு இப்போது எந்த அவசரமும் இல்லை. அதுமட்டுமின்றி காதலர்களாக நாங்கள் இன்னும் சில காலம் வாழ்ந்து பார்க்கலாம் என்று யோசித்து உள்ளோம்.

Also Read : ஓவர் குடி, குக் வித் கோமாளி அரங்கில் மட்டையான போட்டியாளர்.. உடனே தூக்கிட்டு விஜய் டிவி பிரபலத்திற்கு வாய்ப்பு

ஆகையால் இன்னும் ஒரு வருடத்திற்கு பிறகு தான் திருமணத்தைப் பற்றி யோசிப்போம் என்று பாவனி கூறியுள்ளார். காதலைக் கடந்த லிவிங் டுகெதர் முறையில் வாழும் இவர்கள் பட வாய்ப்புக்காக தற்போது திருமணத்தை தள்ளி போட்டு வருகிறார்கள். ஏனென்றால் கதாநாயகிகளுக்கு திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்பு குறையும்.

இப்போது தான் பாவனி சினிமாவில் அடியெடுத்து வைத்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அவரது முதல் திருமணம் பாதியிலேயே முடிந்த நிலையில் அடுத்ததாக தனது கேரியரில் வளர்ச்சி அடைந்தவுடன் அமீரை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் பாவனி உள்ளார்.

Also Read : ஒரே நாளில் கணித்த ஆண்டவர், பிக் பாஸ் நடிகருக்கு அடித்த ஜாக்பாட்.. கமலுடன் இணையும் கூட்டணி

Advertisement Amazon Prime Banner