அப்பா எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்.. தாலி மீது நம்பிக்கை இல்ல, அந்தரங்க வாழ்க்கை வாழும் வாரிசு நடிகை

அப்பா எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழி நாம் கேட்டதுண்டு. அதேபோல் தான் இங்கும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. உள்ளூர் சினிமா மட்டும் இன்றி உலக சினிமாவிலும் அப்பாவுக்கு பேரும், புகழும் இருக்கிறது. இந்த செல்வாக்கின் மூலம் சினிமாவில் நுழைந்த நடிகை பல திறமைகளை கைவசம் வைத்திருந்தார்.

ஆனால் என்ன பிரயோஜனம் சில வருடங்களில் கோலிவுட்டில் அவரது மார்க்கெட் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. இதனால் அக்கட தேசத்திற்கு சென்ற நடிகை அங்கேயே படங்களில் நடித்து வருகிறார். மேலும் தந்தையைப் போலவே ஆரம்பத்தில் இருந்து நடிகை பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். காரணம் அவருடைய படங்கள் தான்.

Also Read : நெருக்கமான காட்சியில் நடிக்க தயங்கிய நடிகர், நடிகை.. கூச்சத்தை போக்க இயக்குனர் செய்த காரியம்

அதாவது நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நிலையில் அவர்களுடன் ஓவர் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். அவர் எந்த படத்தில் நடித்தாலும் அந்த நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். இது ஒரு புறம் இருக்க தனது நண்பன் ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்.

அவரை எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்ற கேள்விக்கு தாலி மீது நம்பிக்கை இல்லையாம். இப்போது இல்லை என்றாலும் விருப்பம் படும்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் நடிகை இருக்கிறார். அதுவரைக்கும் அந்தரங்க வாழ்க்கையில் வாழ நினைக்கிறார் வாரிசு நடிகை.

அப்பாவும் இது போல் தான் பிரபல நடிகையுடன் பல வருடங்கள் ஒன்றாக இருந்துவிட்டு பாதியிலேயே கழட்டி விட்டு விட்டார். இப்போது அப்பனுக்கு தப்பாமல் பிறந்திருக்கும் மகளும் திருமணம் செய்து கொள்ளாமலே உல்லாசமாக இருக்க திட்டம் தீட்டி வருகிறார். ஆனால் எவ்வளவு நாள் தான் இந்த உறவு இப்படியே போகிறது என்பதை பார்ப்போம் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read : ஆண்கள் என்றாலே அலர்ஜி.. இளம் நடிகையை தவறான உறவுக்காக படாத பாடு படுத்தும் சீனியர் நடிகை

- Advertisement -