முதல் 5 நாள் படத்திற்கு கூட்டமே இல்ல.. அடுத்த 80 நாட்களுக்கு தொடர்ந்து ஹவுஸ் ஃபுல் ஆன அஜித் படம்!

தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக  ரவுண்ட் கட்டி  கொண்டிருப்பவர் அஜித் குமார்.  2023ல் தொடக்கத்தில் வெளியான அஜித்தின் துணிவு படம் தான் முதல் மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூலை  ஈட்டிய படங்களின் லிஸ்டில் டாப் இடத்தைப் பிடித்துள்ளது. அப்படி இருக்கும்போது கடந்த 14 வருடத்திற்கு முன்பு வெளியாகி இவருடைய படத்திற்கு முதல் 5 நாட்கள் வரை தியேட்டரில் கூட்டமே இல்லை.

ஆனால் அடுத்த 80 நாட்கள் ஹவுஸ் ஃபுல் ஆனது. இது இப்போது வரை தல ரசிகர்களிடம் ஆச்சரியமாக பேசக்கூடிய விஷயமாக இருக்கிறது. அதாவது 1999இல் வெளியான வாலி திரைப்படம் மிகப்பெரிய அஜித் சினிமா வாழ்க்கையில் வெற்றி பெற்ற படம். இந்த படத்தின் மூலம் தான் அஜித்திற்கு முதன் முறையாக ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்தது.

Also Read: அஜித் காசு விஷயத்தில் ரொம்பவும் கரெக்ட்டாக இருப்பார்.. ஹெச். வினோத்துக்கு அஜித் சொன்ன தரமான அட்வைஸ்

ஆனால் இந்த படம் வெளிவந்தபோது முதல் இரண்டு நாட்கள் அஜித்திற்காக கொஞ்சம் கூட்டம் வந்தது. அடுத்து தொடர்ந்து ஐந்து நாட்கள்  படத்தை பார்க்க ஆளே இல்லாமல் இருந்து வந்தது. படத்தை அனைத்து தியேட்டர்களிலிருந்து எடுத்து விடலாம் என யோசிக்கும் அளவிற்கு கூட்டம் இல்லை. ஆனால் திடீரென இந்த  படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றவர்களிடம் சொல்லி கூட்டம் வரத் தொடங்கியது.

கடைசியில் பத்து நாட்களுக்கு மட்டுமல்ல அடுத்து தொடர்ந்து 80  நாட்கள், ஆயிரம் பேர் உட்கார்ந்து பார்க்கக்கூடிய பெரிய தியேட்டரான  சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த தியேட்டரில் தொடர்ந்து 80 நாட்கள் ஹவுஸ்ஃபுல்லாக வாலி படம் ஓடியது. 

Also Read: ஹீரோவை மிஞ்சிய 6 வில்லன் கதாபாத்திரம்..அஜித்திற்கு பயத்தை காட்டிய விக்டர்

அப்படி என்றால் தமிழ்நாடு முழுக்க தொடர்ந்து 100 நாட்கள் ஓடிய அஜித்தின் படம் வாலி. இது பெண்கள் பார்க்க மாட்டார்கள் என பேசப்பட்ட படம்.  ஆனால் அதிகமாக பெண்களே பார்த்தார்கள். படத்தைப் பற்றி தவறாக கூட கூறவில்லை. அந்த அளவிற்கு  பெண்களே  கொண்டாடிய படம் வாலி.  

ஏனென்றால் இந்தப் படத்தில் தம்பியின் மனைவியையே அண்ணனும் அடைய ஆசைப்படுவார். இதில் அஜித் இரட்டை வேடத்தில் அண்ணன் தம்பிகளாக நடித்திருப்பார். இதில் வில்லானாக நடித்த அஜித்தின் நடிப்பு அல்டிமேட் ஆக இருந்தது. அதுதான் பெண்களையும் திரையரங்கிற்கு அலை அலையாய் வர வைத்தது.

Also Read: ஒரு நாள் முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த உதயநிதி.. அஜித்தின் அறிவிப்பால் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்