நான் தாம்பா நம்பர் ஒன், பார்த்திபனை மீண்டும் உருட்டும் ப்ளூ சட்டை மாறன்.. கைகொட்டி சிரிக்கும் அமேசான் ப்ரைம்

இரவின் நிழல் படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகில் முதல் திரைப்படம் என்று கூறினார். இதனை எதிர்த்து ப்ளூ சட்டை மாறன் இல்லை இது இரண்டாவது படம் தான் முதல் படமல்ல என்று கூறும்போது பார்த்திபன் என்னை பாராட்ட விட்டாலும் பரவாயில்லை. இப்படி பொய் சொல்லவேண்டாம் என்று கூறியிருந்தார்.

தற்போது இரவின் நிழல் அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி பார்த்திபன் எழுதிய இயக்கி நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படத்தில் இவருடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ருத், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Also Read: வாய் இருந்தா மட்டும் ஜெயிச்சிட முடியாது, உண்மை தான் வெல்லும்.. பார்த்திபனுக்கு எதிராக ப்ளூ சட்டை மாறன் டுவிட்

ஏஆர் ரகுமான் இசையமைத்த இந்த படம் உலக அளவில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என படக்குழுவால் சொல்லப்பட்டது. ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு ப்ளூ சட்டை மாறன் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரவின் நிழல் படம் வெளியாகி 3 மாதங்களை கடந்தும் சமீபத்தில் தான் இந்த படம் அமேசான் ப்ரைமில் வெளியானது.

இந்நிலையில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இரவின் நிழல் படத்தை கிளிக் செய்தால் படத்தின் தொடர்ச்சியில் ட்ரிவியா (Trivia) என்ற தகவல் பிரிவில், ‘உண்மை என்னவென்றால் இது உலக அளவில் இரண்டாவது சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம். இந்த படத்தின் இயக்குனர் தொடர்ந்து தவறான தகவலை பரப்பி வருகிறார்’ என்று கூறியிருக்கிறார்கள்.

Also Read: கடன் அடைக்க முடியாத நடிகை, தனியறையில் மானபங்கப்படுத்திய கொடூரம்.. உண்மையை படமாக்கிய பார்த்திபன்

எதனால் அமேசான் பார்த்திபனுக்கு இப்படி ஆப்பு வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. பார்த்திபன் படத்தை வாங்கும் போதே இதை சொல்லி இருக்கலாம். ஆனால் அப்போது சொல்லாமல் இப்படி நடந்து கொண்டிருப்பது பார்த்திபனுக்கே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ஒருவேளை பணம் அதிகமாக வாங்கி இருப்பாரோ பார்த்திபன் என்று தோன்றுகிறது. தற்போது ப்ளூ சட்டை மாறன், நான் சொல்வது பொய் என்று சொன்ன பார்த்திபன், இவர் பணம் வாங்கி விற்ற நிறுவனமே பொய் சொல்லி இருக்கிறது இப்பொழுது என்ன பண்ண போகிறான் என்று பார்த்திபனை உருட்டி உள்ளார் ப்ளூ சட்டை மாறன். இதனால் பார்த்திபன், ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை’ என புலம்பிக் கொண்டிருக்கிறார்.

Also Read: 23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித் கையை பிடிக்க நினைக்கும் பார்த்திபன்.. இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா?

- Advertisement -