திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

நிக்சன் செய்த தரமான சம்பவம்.. யுகேந்திரனை வச்சு செய்யப் போகும் கமல்

Bigg Boss Season 7: இந்த வாரங்களிலும் இல்லாத அளவிற்கு இந்த வாரத்தின் கமலஹாசன் எபிசோட் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் கடந்த வாரம் ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க் என்ற பெயரில் நடந்த போராட்டம் தான். போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் உடல் அளவில் டாக்கி கொண்டதால் தான் தற்போது பார்வையாளர்கள் கொதித்து எழுந்து போய் இருக்கிறார்கள்.

கடந்த சீசன்களில் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் குறிப்பாக இந்த ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க் பிசிகல் வயலன்ஸ் அதிகமாகவே இருந்தது. அதேபோன்று மாயாவிடம் இருந்த சிலிண்டரை பறிக்கிறேன் என்ற பெயரில் மணி மற்றும் விஜய் வர்மா அவரை அட்டாக் செய்தது மற்றும் விஜய் வர்மா பிரதீப் ஆண்டனியை குத்துச் சண்டைகள் அடிப்பது போல் அடித்தது விஷ்ணுவை கழுத்தை நெரித்தது என அத்தனையுமே க்ரைம் லிஸ்டில் சேர்ந்து விட்டது.

சனிக்கிழமை யான இன்று வெளியான ப்ரோமோவில் கமலஹாசன் இந்த டாஸ்க்கில் புத்தி மற்றும் சக்தியை வைத்து விளையாடியவர்களை பற்றி பேசினார். சூசகமாக சக்தியை வைத்து விளையாடியவர்களை கொஞ்சம் காட்டமாக விமர்சனம் செய்தார். இன்று முழுக்க இந்த விஷயம் தான் அதிக அளவில் பேசப்படும் என நன்றாகவே தெரிகிறது.

பார்வையாளர்களின் மொத்த எதிர்ப்பும் விஜய் வர்மா மீது இருக்கும் பொழுது ஆட்டையை மொத்தமாக கலைத்திருக்கிறார் நிக்சன். நிக்சனின் ரசிகர்களுக்கு இன்று தரமான ட்ரீட் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அவர் இரண்டாவதாக சேவ் ஆனதோடு இன்று அவர் யுகேந்திரனை பற்றி சொல்லிய ஒரு விஷயம் மிகப்பெரிய அளவில் புயலை கிளப்பி இருக்கிறது.

இந்த வாரம் நடந்த ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்கில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் அக்ஷயாவால் இரண்டு கைகளை உபயோகித்து விளையாட முடியாது, எனவே நான் அவர்களுக்காக விளையாடுகிறேன் என முன் வந்தார் யுகேந்திரன். அந்த விஷயத்தைப் பற்றி ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்த பூர்ணிமா கமலிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது எழுந்த நிக்சன், யுகேந்திரன் விளையாடியது பிக் பாஸ் வீட்டிற்காக தான். உங்களுக்காக விளையாடுகிறேன் என்று சொல்லி அந்த ஆக்சிஜன் சிலிண்டரை எங்களிடம் கொடுப்பதர்க்த்தான் அவர் பிளான் போட்டு அங்கு வந்தார் என்று சொல்கிறார். இந்த விஷயத்தை கேட்ட கமல் நக்கலாக சிரிக்கிறார். ஸ்மால் பாஸ் வீட்டு ஆட்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது. கமல் இந்த விஷயத்தை எப்படி கையாளுகிறார் என்று இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

- Advertisement -

Trending News