ஏற்கனவே நமக்கு செட் ஆகல, உங்கள நம்பித்தான் வர்றேன், ஏமாத்த மாட்டீங்களே.. கெஞ்சும் நிவின் பாலி

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நிவின்பாலி(nivin pauly) கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்க உள்ளார் என்ற செய்தி இளம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

நிவின் பாலி மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் பரிட்சயமான நடிகராக வலம் வருகிறார். நிவின்பாலி நடிப்பில் நேரடி தமிழ் மற்றும் மலையாள படமாக வெளியான நேரம் படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழில் ஏகப்பட்ட வரவேற்ப்பை பெற்று இளைஞர்கள் மத்தியில் பிரபலமான படமாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து நிவின்பாலி மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க மாட்டாரா என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்காக ரிச்சி என்ற படத்தில் நடித்தார் நிவின் பாலி. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனால் நமக்கு தமிழ் செட்டாகாது என நான்கு வருடமாக தமிழ் சினிமா பக்கம் வராமல் இருந்த நிவின் பாலி மீண்டும் தமிழ் சினிமாவில் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் உருவாக உள்ளது.

மம்முட்டியை வைத்து பேரன்பு என்ற படத்தை எடுத்திருந்தார். தற்போது மலையாள சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக மாறி விட்டாராம். இதன் காரணமாக இயக்குனர் ராம் படத்தில் நடித்தால் நமக்கு தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என மலையாள நடிகர்கள் ராமை சுற்று போட்டுள்ளனர்.

nivin-pauly-ram-cinemapettai
nivin-pauly-ram-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்