என்னங்க இப்படி ஒல்லி ஆகிட்டீங்க.. நிவேதா தாமஸை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிவேதா தாமஸ். தமிழில் போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம், தர்பார் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக நிவேதா தாமஸ் நடிக்கும் படங்களுக்கு ஒருவித எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

கேரியரின் உச்சத்தில் இருக்கும் நிவேதா தாமஸ் அடுத்ததாக சில பல பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். வழக்கம்போல் முன்னணி நடிகையான பிறகு அடுத்தது கல்யாணம் என்ற வார்த்தையை கிளப்பி விட்டு விடுவார்கள்.

ஆனால் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் தொடர்ந்து தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார் நிவேதா தாமஸ்.

முதலில் கொஞ்சம் உடல் எடை வைத்து பப்ளியான தோற்றத்தில் நடித்து வந்த நிவேதா தாமஸ் சமீப காலமாக தீவிர உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து விட்டார்.

தற்போது பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார் நிவேதா தாமஸ். ஆனால் நிவேதா தாமஸ் உடல் எடையைக் குறைத்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை போல. இவருடைய முன்னாள் புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

nivetha-thomas-weight-loss-photo-cinemapettai
nivetha-thomas-weight-loss-photo-cinemapettai
- Advertisement -