காதல் முறிவை பற்றி முதன் முறையாக மனம் திறந்த நித்யாமேனன்! அம்மணி அதுக்கப்புறம் டோட்டலா மாறிட்டாங்களாம்!   

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி காணும் நடிகைகளில் ஒருவர்தான் நித்யாமேனன். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

அதேபோல் நித்யாமேனன் தமிழில் 180, வெப்பம் ஆகிய படங்களின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நித்யாமேனன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

சமீபத்தில் நித்யா மேனன் தனது உடல் எடையை பெருமளவு குறைத்து ஸ்லிம்மாக மாறி தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

இந்த நிலையில் நடிகை நித்யா மேனன் தனது காதல் முறிவை பற்றி முதன் முறையாக மனம் திறந்து பேசி இருக்கும் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதாவது நித்யா மேனன் எதையும் ஒளிவு மறைவில்லாமல் பேசி, தனக்கு எதிராக வரும் விமர்சனங்களுக்கு செவிசாய்க்காமல், தனது வேலையை மட்டும் பார்ப்பார்.

இவ்வாறிருக்க நித்யாமேனன் பேட்டி ஒன்றில், தன்னுடைய முதல் காதல் தோல்வியில் முடிந்ததாகவும், அதற்குப் பிறகு ஆண்களை கொஞ்ச நாள் வெறுத்ததாகவும், இனி காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்திருக்கிறாராம்.

இதனைத் தொடர்ந்து நித்யாமேனன், ‘யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது. எனக்கு பிடித்த மாதிரி தான் நான் வாழ்வேன்’ என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லி இருக்கிறார்.

NithyaMenon
NithyaMenon

எனவே, நித்யாமேனன் தனது காதல் முறிவை பற்றி முதல்முறையாக பேசியிருக்கும் இந்த தகவல்கள் இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்