வெளிநாட்டிற்கு பறந்த சென்ற ராஜு பாய்.. இந்தமாதிரி ட்விஸ்ட் ஹாலிவுட் படத்துல கூட பாத்ததில்லை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர் 2. இந்தத் தொடரில் தற்போது பிக்பாஸில் போட்டியாளராக இருக்கும் ராஜு, கத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விட்ட காரணத்தால் சீரியலில் அவருக்கு பதில் வேறு யாராவது நடிப்பார்களா என்ற கேள்வி  ரசிகர்களிடையே இருந்து வந்தது. தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.

அதாவது சீரியலில் கத்தி காணாமல் போவது போல் காட்டப்பட்டு வருகிறது. கத்தியின் நண்பன் மாயன் கத்தியை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். எங்கும் கிடைக்காமல் போன நிலையில் அவருக்கு கத்தி வெளிநாடு சென்ற தகவல் கிடைக்கிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாயன் கத்தியை தேடி ஏர்போர்ட்டுக்கு செல்கிறார்.  அங்கு கத்தியின் மனைவியும், மாயனின் தங்கையான காயத்ரி நிற்கிறார். மாயன் உடனே காயத்ரியிடம் கத்தி எங்கே என்று கேட்கிறார்.

அதற்கு பதில் சொல்லாமல் காயத்ரி மேலே போகும் பிளைட்டை பார்க்கிறார். அப்பொழுது மாயனுக்கு கத்தி வெளிநாடு சென்றது உண்மைதான் என்று தெரிய வருகிறது. இதன் மூலம் இயக்குனர், ராஜு பிக் பாஸ் வீட்டில் இருந்து வரும் வரை அவர் வெளிநாட்டில் இருப்பது போல் காட்ட முடிவு செய்துள்ளார் என்று தெரிகிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள் கத்தி கேரக்டரில் வேறு யாரையும் எங்களால் நினைத்துப் பார்க்க முடியாது.  நல்ல வேலை நீங்கள் ராஜுவுக்கு பதில் யாரையும் மாற்றவில்லை என்று கருத்து கூறுகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்