நினைத்தேன் வந்தாய் படத்தில் விஜய்க்கு பதிலாக நடிக்க இருந்த பிரபலம்.? 22 வருடம் கழித்து வெளிவந்த உண்மை!

தற்போது தமிழ் சினிமாவில் தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில், கடந்த 1998ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான படம் நினைத்தேன் வந்தாய். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் செல்வபாரதி இயக்கத்தில் உருவான நினைத்தேன் வந்தாய் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தேவயானி மற்றும் ரம்பா ஆகிய இருவர் நடித்திருப்பார்கள்.

ஒரு முக்கோண காதல் கதையாக உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது நவரச நாயகன் கார்த்திக் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இயக்குனர் செல்வபாரதியுடன் ஏற்பட்ட சம்பளப் பிரச்சினை காரணமாக கார்த்திக் இப்படத்தில் நடிக்கவில்லையாம். கார்த்திக் இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த பின்னரே இப்படம் நடிகர் விஜய்க்கு சென்றுள்ளது.

மேலும் இப்படம் வெளியாகி நடிகர் விஜயக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. இப்படம் வெளியாகி ஹிட் ஆனதை கண்ட கார்த்திக் இப்படத்தை மிஸ் செய்து விட்டதாக வருத்தம் தெரிவித்தாராம்.

karthik-cinemapettai
karthik-cinemapettai
- Advertisement -