குடும்ப சண்டையை சந்தி சிரிக்க வைக்க பிளான் போடும் விஜய் டிவி.. வைல்ட் கார்டு எண்ட்ரியில் நடக்கப்போகும் டிவிஸ்ட்

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்த தாடி பாலாஜி தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இவர் ஏற்கனவே ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அவருடன் அவரின் மனைவி நித்யாவும் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். அந்த சமயத்தில் அவர்கள் இருவரும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர். இதனால் அவர்கள் மூலம் நிறைய கன்டென்ட் கிடைக்கும் என்று நினைத்த விஜய் டிவி அவர்களை போட்டியாளராக களம் இறக்கியது.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே தாடி பாலாஜி அந்த நிகழ்ச்சியில் தன் மனைவியை குறித்து பல தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். இதனால் விஜய் டிவியின் டிஆர்பி எக்கச்சக்கமாக எகிறியது. தற்போது இந்த அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அதே போன்றதொரு முயற்சியை விஜய் டிவி மேற்கொள்ள இருக்கிறது.

கடந்த வாரம் தாடி பாலாஜி பிக்பாஸ் வீட்டுக்குள் தன் மகளை மிகவும் மிஸ் செய்வதாக கூறி வருத்தப்பட்டார். மேலும் அவருடைய மனைவி பற்றியும் சில தவறான விஷயங்களை பேசினார். இதனால் கோபமடைந்த அவருடைய மனைவி நித்யா சமூக வலைத்தளங்களில் பாலாஜியை பற்றி பல உண்மைகளை தெரியப்படுத்தினார்.

அதுமட்டுமல்லாமல் பாலாஜியின் மகள் போசிகாவும் தன் அப்பாவைப் பற்றிய விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது தன் அப்பா தன்னிடம் அன்பு காட்டவில்லை, மீடியாவுக்கு முன் அவர் நடிக்கிறார் என்று அந்த குழந்தை கூறியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே மற்றொரு விஷயம் கசிந்துள்ளது.

அதாவது நித்யா அந்த வீடியோவில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு செல்ல ஆர்வத்துடன் இருப்பதாகவும், அப்படி அங்கு செல்லும் பட்சத்தில் பாலாஜியை நான் கிழி கிழி என்று கிழித்து விடுவேன் என்றும் கூறினார். இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் அவர் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவரை உற்சாகப்படுத்தினார்.

தற்போது விஜய் டிவியும் நித்யாவை வைல்ட் கார்டு என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே பிரச்சனையான அவர்களுடைய குடும்ப சண்டையை தற்போது சந்தி சிரிக்க வைக்க விஜய் டிவி பிளான் போட்டுள்ளது. இதனால் விரைவில் நாம் நித்யாவின் அதிரடி சம்பவங்களை பிக்பாஸ் வீட்டுக்குள் எதிர்பார்க்கலாம்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை