
கடந்த சில மாதங்களாகவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தல தளபதி இருவரின் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் கடந்த 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் துணிவு படம் முதல் நாளில் பலரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில் வாரிசு படத்திற்கு சில நெகட்டிவ் கமெண்டுகள் குவிந்தது.
ஆனால் வாரிசு தான் தற்போது அனைத்து தரப்பு மக்களின் கவர்ந்து வசூலில் முன்னிலை வகித்து வருகிறது. வாரிசு படம் வெளிவந்து வெற்றி பெற்று விட்டது என்று அனைத்து சோசியல் மீடியாவிலும் வெளி வருகின்றன. இருந்தாலும் உண்மையான படத்தின் விமர்சனங்களை பார்த்தால் படம் தோல்வியை நோக்கி செல்கிறேன் என்ற எண்ணத்தில் பயந்த தயாரிப்பாளர்கள் தில் ராஜ் புது முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
Also Read: மட்டமான வேலை பார்த்த AK Mafia ரசிகர்.. தமிழை போல் தெலுங்கிலும் வாரிசுக்கு எதிராக நடக்கும் சதி
மீண்டும் தயாரிப்பாளர் தில் ராஜ், இயக்குனர் வம்சி, கதாநாயகி ரஷ்மிகா சென்னைக்கு வருகை தர உள்ளனர். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தியேட்டராக சென்று படத்தின் பிரமோஷனை மேற்கொள்ள உள்ளனர். முடிந்தால் விஜய்யையும் கூப்பிட்டு போகலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
படம் வெற்றி பெற்ற பிறகு வசூல் ரீதியாக வெற்றி அடைந்த பிறகும் எதற்காக பயத்தில் இவர்கள் வருகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. உண்மையாக பார்த்தால் படத்தின் விமர்சனம் படத்தின் வெற்றியை பாதிக்கிறது என்ற காரணத்தால் மட்டுமே. அதையும் சரி செய்து ரசிகர்களை தொடர்ந்து திரையரங்குகளில் குவிக்க வைப்பதற்காக மீண்டும் ப்ரோமோஷன் வேலைகளை துவங்கும் முயற்சியில் தில் ராஜு இறங்கி இருக்கிறார்.
Also Read: இனி ஒரு உயிர் போகக்கூடாது, ஆட்டமெல்லாம் வாரிசு துணிவோடு முடிஞ்சு.. அஜித், விஜய் எடுத்த அதிரடி முடிவு
அதற்கேற்றார் போல் தற்போது பொங்கல் பண்டிகையின் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால், இந்த சமயத்தை குறி வைத்து வாரிசு படக்குழு திரையரங்கிலேயே ப்ரோமோஷன் வேலையை நடத்த முடிவெடுத்து இருக்கின்றனர். ஏற்கனவே ரிலீஸ் ஆன மூன்று நாட்களிலேயே 100 கோடி வசூல் பெற்று சாதனை படைத்திருக்கிறது.
முதல் நாளிலேயே உலகம் முழுவதிலும் 50 கோடியை நெருங்கி இருந்த வாரிசு மூன்று நாட்களில் இவ்வளவு வசூலித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வசூல் அடுத்தடுத்த நாட்களிலும் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தத் தொடர் விடுமுறைகளில் இன்னும் ஒரு 100 கோடியை அசால்ட் ஆக வாரிக் குவிக்கப் போகிறது. அதற்கேற்றார் போல் வாரிசு படக்குழுவும் மீண்டும் ப்ரோமோஷன் வேலைகளை துவங்கும் முயற்சியில் உள்ளனர்.
Also Read: நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கிய வாரிசு.. 3 நாள் பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய வசூல்