ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

இந்தியன் 3 ரிலீஸில் புது ட்விஸ்ட் வைத்த கமல்.. ரிலீஸில் தொடரும் சிக்கல்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், கமல் கூட்டணியில் கடந்த ஜுலை மாதம் ‘இந்தியன் 2’ படம் வெளியானது. ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பிற்கு பின் ரிலீசானது இப்படம். பல வருடங்களாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

சொல்லப்போனால், இயக்குனர் ஷங்கர் ஒரு ட்ரோல் மெடீரியலாக மாறினார். ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு சமயத்திலே பார்ட் 3-க்கான பெரும்பாலான காட்சிகளை படமாக்கி விட்டார் இயக்குனர் ஷங்கர். ‘இந்தியன் 2’ கிளைமேக்ஸ் காட்சியிலே அடுத்த பாகத்திற்கான ப்ரோமோ ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது.

இதை ரசிகர்கள் வச்சு செய்துவிட்டார்கள். இந்த நிலையில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து, படம் படு தோல்வி அடைந்ததால், அடுத்த பாகத்தை, OTT-யில் நேரடியாக வெளியிடலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்ததாக திடீர் தகவல் ஒன்று வெளியானது.

கமல் வைத்த ட்விஸ்ட்

இந்நிலையில் தற்போது ‘இந்தியன் 3’ ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டாம் பாகம் தோல்வி அடைந்த காரணத்தால், சிறிது நாட்களுக்கு படத்தை ரிலீஸ் பண்ணாமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்துள்ளார் கமல்.

மேலும் நடிகர் கமல் ஹாசன் தற்போது தக் லைப் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் வெற்றி அடைந்த பின்னரே இந்தியன் 3-ஐ ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். அடுத்து ஒரு ஹிட்டாவது கொடுத்த பின் தான் இந்தியன் 3 படம் ரிலீசாக வாய்ப்புள்ளது.

ஆனால் ஏற்கனவே பழைய பஞ்சாங்கத்தை தான் பாடியுள்ளார்கள். இன்னும் நாட்கள் அதிகமாக போனால், மக்கள் யாரும் OTT-யில் கூட பார்க்க மாட்டார்கள் என்று விமர்சனம் முன்வைக்க பட்டு வருகிறது.

- Advertisement -spot_img

Trending News