புதிய விதிமுறைகளுடன் விளையாடவிருக்கும் ஐபிஎல் வீரர்கள். பெரிய சர்ச்சைக்கு வந்தது தீர்வு.

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே நடக்கவிருக்கும் 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி இம்மாதம் 9ஆம் தேதியிலிருந்து மே மாதம் 30ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. கிட்டத்தட்ட 9 அணிகள் பங்கு பெறவிருக்கும் இந்தத் தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போது மூன்று முக்கிய விதிமுறைகளை பிசிசிஐ புதிதாக உருவாக்கியுள்ளது, அது ஒன்பதாம் தேதி நடைபெறவிருக்கும் முதல் போட்டிகளிலிருந்து அமலுக்கு வருகிறது.

1.போட்டியின் கால அளவு.

மொத்தமாக 40 ஓவர்கள் நடைபெறும் இந்த போட்டியை பிசிசிஐ இரு அணிகளுக்கும் வரையறுத்துள்ளது. ஒவ்வொரு அணிகளுக்கும் தலா 90 நிமிடங்கள். மொத்தமாக 180 நிமிடங்கள்.

90 நிமிடங்களில் 85 நிமிடங்கள் விளையாடுவதற்கு எடுத்துக்கொண்டு மீதமுள்ள 15 நிமிடங்களை மேக்ஸிமம் டைம் அவுட் எனப் பிரித்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு 14.1 ஓவர்கள் டைம் அவுட் அல்லாது போட்டிருக்க வேண்டும்

2. ஷாப்ட் சிக்னல்.

ஷாப்ட் சிக்னல் எனப்படும் அம்பயர் கொடுக்கும் முடிவிற்கு நிறைய குழப்பங்களும் வாக்குவாதங்களும் நடைபெறுகிறது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சர்ச்சைக்குரிய முடிவுகள் அனைத்தும் மூன்றாவது நடுவரிடம் சென்று அதன் பின் கொடுக்கப்படும். இதனால் துல்லியமான முடிவுகளை இரு அணிகளுமே பெறலாம்.

Softsignal-Cinemapettai.jpg
Softsignal-Cinemapettai.jpg

3.ஷார்ட் ரன் கட் .

ரன் கட் செய்யும் முடிவுகளை மாற்றுவதற்கு மூன்றாவது நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் ஒரு ரன்னை நடுவர் கட் செய்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. தற்போது இந்த முடிவை மூன்றாவது நடுவர் தான் கொடுக்க முடியும் என விதிகள் மாற்றி அமைக்கப்பட்டது.

Runcut-Cinemapettai.jpg
Runcut-Cinemapettai.jpg
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்