கீர்த்தி சுரேசை பங்கம் செய்த வரலட்சுமி சரத்குமார்.. கண்டமேனிக்கு கலாய்க்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவில் நம்பத்தகுந்த நாயகிகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். ஏனெனில் இவர் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனது திறமையான நடிப்பாலும், அழகாலும் பல இளைஞர்களை தன்பால் ஈர்த்துள்ளார்.

இதனால் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பை பெற்றார் கீர்த்தி. தற்போது கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அதேபோல் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி, மாபெரும் ஹிட்டடித்த மகாநதி திரைப்படம் கீர்த்தி சுரேஷுக்கு பெரும் புகழை பெற்றுக்கொடுத்தது. இதனால் அம்மணியின் புகழ் பாலிவுட் வரை பரவியது. இதன் விளைவாக தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வரலட்சுமி சரத்குமாருக்கு தெரிவித்திருக்கும் பிறந்தநாள் வாழ்த்து நெட்டிசன்கள் இடையே கேலி பொருளாக மாறியுள்ளது.

அதாவது நடிகை கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமாரும் நெருங்கிய தோழிகள். இருவரும் இணைந்து விஜயின் சர்க்கார் மற்றும் விஷாலின் சண்டைக்கோழி 2 போன்ற திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று முன் தினம் (மார்ச் 3ஆம் தேதி) தனது டுவிட்டர் பக்கம் மூலமாக வரலட்சுமி சரத்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இதனை நெட்டிசன்கள் பெரும் பேசுபொருளாக  மாற்றியுள்ளனர்.

ஏனென்றால், வரலட்சுமிக்கு பிறந்தநாள் மார்ச் ஐந்தாம் தேதி தானாம்.  இதற்கு பதிலளிக்கும் வகையில் வரலட்சுமி டுவிட்டர் பக்கத்தில், ‘நன்றி செல்லம். ஆனா என்னோட பிறந்த நாள் அஞ்சாம் தேதி தான்’ என்று  பதிவிட்டுள்ளாராம்.

எனவே, இன்று பிறந்தநாள் கொண்டாட உள்ள வரலட்சுமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே கீர்த்தி சுரேஷ் இப்படி ஒரு வாழ்த்தை தெரிவித்து இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் கீர்த்தியை தாறுமாறாக கலாய்த்து வருகின்றனராம்.

birthday-wish-varalaxmi
birthday-wish-varalaxmi
- Advertisement -