68 வயதில் போனகபூர் செய்த மட்டமான வேலை.. வறுத்தெடுக்கும் இணையவாசிகள்

Boney Kapoor : பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளராக உள்ள போனிகபூர் தமிழிலும் சில படங்களை தயாரித்திருக்கிறார். குறிப்பாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களை ஜீ ஸ்டுடியோஸ் மூலம் போனி கபூர் தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் தமிழ் மற்றும் ஹிந்தியில் பிரபல நடிகையான ஸ்ரீதேவியை போனி கபூர் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி துபாயில் பிரபல ஹோட்டலில் பாத் டப்பில் இருந்து கிடந்தார். அவரது மரணம் தற்போது வரை மர்மமாக இருக்கிறது.

மேலும் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக படங்களில் நடித்து வருகிறார். இந்த சூழலில் அஜய் தேவகன் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், அமித் சர்மா இயக்கத்தில் உருவாகி இருக்கிறது மைடான் படம்.

இந்தப் படம் கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் அவர்களின் பயோபிக்காக உருவாகி இருக்கிறது. இப்படத்தில் ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருந்தார். சில காரணங்களினால் அவரால் நடிக்க முடியாத நிலையில் பிரியாமணி நடித்திருந்தார்.

68 வயதில் போனகபூர் செய்த வேலை

இன்றைய தினம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் நேற்று ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மைடான் படக்குழு மற்றும் போனி கபூர் கலந்து கொண்டனர்.

மைடான் பட விழாவில் போனி கபூர் மற்றும் பிரியாமணி

Boney-Kapoor-priyamani
Boney-Kapoor-priyamani

அப்போது பிரியாமணியை தகாத முறையில் போனிகபூர் பத்திரிக்கையாளர்கள் போட்டோ எடுக்கும்போது தொட்டார் என்று சர்ச்சை கிளம்பி உள்ளது. 68 வயதாகும் போனிகபூருக்கு இந்த வயதில் இது தேவையா என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

அவர் எதார்த்தமாக தொட்டதை இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்