முழுசா நனஞ்சதுக்கு அப்புறம் முக்காடு எதுக்கு.. வண்டி வண்டியா ரீல் விட்டதால் லதா ரஜினிகாந்த்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Latha Rajinikanth: கோச்சடையான் படத்தில் தயாரிப்பாளருக்கு நடந்த மோசடியால் லதா ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவாயிருக்கிறது. இது விஷயமாக நேற்று பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக போகும்பொழுது தலையில் முக்காடு போட்டு போனது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த லதாவின் பேச்சு ஏதோ சின்ன குழந்தைகளுக்கு காதுல பூ சுத்துற மாதிரி இருக்கிறது.

அதாவது நீதிமன்றத்தில் பிடிவார் போட்ட நிலையில், ஆஜராகப் போகும்பொழுது முகத்தை மறைக்க வேண்டும் என்று முக்காடு போட்டுக் கொண்டார் என்று லதா ரஜினிகாந்த் மீது பலரும் விமர்சனங்களை வைத்தார்கள். இதனால் #முக்காடுலதா என்று ஹாஷ்டேக் போட்டு நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக லதா ரஜினிகாந்த் கூறியது என்னவென்றால் என் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக நான் அந்த மாதிரி பண்ணவில்லை. வெயில் அதிகமாக இருந்ததால் என்னுடைய துப்பட்டாவை வைத்து தலையை மறைத்துக் கொண்டேன் அவ்வளவுதான். ஆனால் இந்த ஒரு விஷயத்தை வைத்து எல்லாரும் இப்படி கேள்வி கிண்டலும் பண்ணுவது வேடிக்கையாக இருக்கிறது.

Also read: விடாமல் துரத்தும் கோச்சடையான் 6 கோடி வழக்கு.. கோர்ட்டுக்கு வந்த லதா ரஜினிகாந்த், நீதிபதி போட்ட உத்தரவு

இதில் முகத்தை மறைத்து போக வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. அப்படி நான் நினைத்து இருந்தால் இப்பொழுது உங்கள் முன்னாடி வந்து தெள்ளத் தெளிவாக பேட்டி கொடுத்திருக்க மாட்டேன். அதனால் நான் வெயிலின் காரணமாகத்தான் அந்த மாதிரி முக்காடு போட்டுக் கொண்டேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் தற்போது கிளைமேட் வெயில் இல்லாமல் குளுகுளுவென்று தான் இருக்கிறது.

அப்படி இருக்கும் பொழுது நீங்க சொல்ற விஷயத்தை நம்புகிற மாதிரி இல்லை. இப்படி வண்டி வண்டிய ரீல் சுத்தாதீர்கள் என்று நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் வாய்க்கா தகராறு போய்க்கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் விஜய் ரசிகர்களுக்கு லதா ரஜினிகாந்த் உடைய விஷயம் தொக்காக கிடைத்துவிட்டது. சும்மாவே கால்ல சக்கரம் கட்டி ஆடுவார்கள்.

இப்பொழுது இந்த விஷயத்தை வைத்து சும்மாவா விடுவாங்க. இதை வச்சு இன்னும் கொஞ்ச நாள் சமூக வலைதளங்களில் போட்டு கிழித்து விடுவார்கள். பாவம் இதற்கெல்லாம் இடையில் தன் மனைவி இப்படி அவதிப்படுவதை பார்த்து ரஜினிகாந்த் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார். குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் மொத்த குடும்பத்தையும் பாதித்துவிடும் என்பதற்கு உதாரணமாக லதா ரஜினிகாந்த் விஷயம் சோசியல் மீடியாவில் கண்ணா பின்னா என்று போய்க்கொண்டிருக்கிறது.

Also read: பாட்ஷா பட ஸ்டைலில் நிவாரணம் வழங்கும் ரஜினிகாந்த்.. குருன்னு சொல்ற சிஷ்யனுங்க கத்துக்கோங்க!