வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அதல பாதாளத்தில் நெட்பிளிக்ஸ், சரிவின் முக்கிய காரணங்கள்.. இனி என்னவாகுமோ?

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே. நூல்களை பிறகு தொடர்ந்து பல சுவாரஸ்யமான சினிமா கட்டுரைகளை கண்டு வருகிறோம். இந்தக் கட்டுரையில் நெட்பிளிக்ஸ்-இன் வீழ்ச்சியை பற்றி பார்க்கலாம்.

இன்றைய நவீன பொழுதுபோக்கு உலகத்தில் சினிமாவுக்கும் வெப்சீரிஸ்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. திரைப்படங்கள் பலவும் இன்று ஓடிடியில் வெளியாவது வாடிக்கை ஆகிவிட்டது. இந்த எண்ணிக்கை மென்மேலும் அதிகரிக்கும் என்பதே நிதர்சனம்.

இவ்வாறு டெக்னோலஜி சென்றுகொண்டு இருக்கும்போது பல நிறுவனங்கள் வளர்ச்சி பெறுவதும் வீழ்வதும் தவிர்க்க முடியாத ஒன்று. நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், சோனி லைவ் போன்ற பெரிய நிறுவங்கங்கள் முதல் சிறு சிறு நிறுவனங்கள் வரை இந்த துறையில் முன்னணியில் உள்ளன. இதில் நெட்பிளிக்ஸ் குறிப்பிடப்பட வேண்டிய நிறுவனம் காரணம் இவர்கள் 1995 ஆம் ஆண்டு முதலே இயங்கி வருகிறார்கள்.

ஆரம்பத்தில் டிவிடிக்களை வாடகைக்கு விடும் நிறுவனமாக இருந்த நெட்பிளிக்ஸ், பின்னாளில் சந்தா செலுத்தி படம், வீடியோக்களை பார்க்கும் முறையை அறிமுகம் செய்து, மாபெரும் சந்தையை தங்களுக்கு என்று உருவாக்கினார்கள். இவர்களது வளர்ச்சி அசுர வளர்ச்சி. இதை அவர்களே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எந்த அமெரிக்க நிறுவனத்தையும் அவ்வளவு எளிதில் வளர்த்துவிடாத பிரிட்டனிலும் நெட்ப்ளிக்சின் வளர்ச்சி அசாத்தியமானது

நெட்பிளிக்சின் வளர்ச்சி படம் பார்க்க கொடுப்பதோடு நிற்காமல், அவர்களே படம் தயாரிப்பது, வெப் சீரிஸ்கள் எடுப்பது என்று தங்கள் துறையில் புதிய புதிய நுட்பங்களை உருவாக்கினார்கள். அதனால் அவர்களது போட்டியாளர்களும் இந்த நிலைக்கு வந்தாகாவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் இவர்களது கட்டணமும் நியாயமானதாகவும் இருந்ததும் முக்கிய காரணம்.

இப்படி உச்சாணி கொம்பில் இருக்கும் நெட்பிளிக்ஸ் நிச்சயம் வீழ்வார்கள் என்று யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். சமீபத்தில் கார்டியன் பத்திரிக்கை சமீபத்திய மூன்று மாதங்களில் நெட்பிளிக்ஸ் 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளார்கள் என்று செய்தி வெளியிட்டது. மேலும் அவர்கள் அடுத்த மூன்று மாதத்திற்குள் இதுவே 10 லட்சமாக அதிகரிக்க கூடும் என்று அச்சுறுத்தி உள்ளனர்.

இந்த இக்கட்டான நிலை எப்படி இவர்களுக்கு தோன்றியிருக்க கூடும் என்பதை அறிஞர்கள் தெளிவாக கூறவேண்டும். இதற்கு முக்கிய காரணம் என்னவென்று அறுதியிட்டு தற்போது கூறுவதற்கு இல்லை. நிறைய போட்டியாளர்கள், ஒரே சந்தாவை பலர் உபயோகிப்பது, சுவாரசியமான படங்கள், வெப்பிசீரிஸ்கள் உருவாக்கவில்லை போன்றவைகள் காரணிகளாக இருக்கலாம். இன்னும் வேறு காரணங்கள் கூட இருக்கலாம். எது எப்படியானாலும் சரி, இது போன்ற டெக்நாலஜி நமது கண்ணில் சீக்கிரமே மண்ணைத்தூவி ஏமாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது விளங்குகிறது!

மேலும் நெட்பிளிக்ட்ஸில் விளம்பரங்கள் கிடையாது. மற்ற நிறுவனங்கள் போல தங்களுக்கு என்று பிரம்மாண்ட பண வசதியும் இல்லை. தற்போது மணி ஹெய்ஸ்ட், ஸ்குயிட் கேம் போன்ற நல்ல விமர்சனங்கள் பெற்ற சீரிஸ்கள் போல எடுக்கவும், விளம்பரங்கள் மூலம் பணம் ஈட்டவும் முயல்கிறார்கள். இது சரியான பாதையா என்று தெரியாது, ஆனால் நிச்சயம் பணம் வருவதற்கான வழி தான். வெற்றி பெற வாழ்த்துவோம்.

- Advertisement -

Trending News