6 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய நேர்கொண்ட பார்வை.. சத்தமில்லாமல் மூடி மறைத்த தயாரிப்பாளர்

அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை. ஆனால் இந்தப்படத்தில் தல அஜித் ஒரு கெஸ்ட் ரோல் மாதிரிதான் நடித்திருந்தார். அஜித் என்ற பெயருக்காகவே அந்தப் படம் 100 கோடி வசூல் செய்தது பெருமைக்குரியது.

அஜித்தை தவிர அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரத்தா தாஸ், பிக் பாஸ் அபிராமி போன்றோர் நடித்திருந்தனர். என்னதான் ஹிந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்தாலும் பார்ப்பதற்கு ஹிந்தி படம் போலவே இருந்தது. அதற்கு காரணம் நாயகிகளின் தேர்வு சரியில்லாதது தான். இதுவே தெலுங்கில் தற்போது வக்கீல்சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழ் மற்றும் தெலுங்கு பரிட்சயமான நடிகைகளான நிவேதா தாமஸ், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த கம்பரிசன் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நேர்கொண்ட பார்வை படம் 100 கோடி வசூல் செய்ததாக ட்ரேடிங் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால் படம் ஆறு கோடி நஷ்டமானதைப் பற்றி யாருமே வாய் திறக்கவில்லை.

நேர்கொண்ட பார்வை படம் 6 கோடி நஷ்டமானது வலைபேச்சு நண்பர்கள் சொல்லித்தான் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. என்ன தான் அஜித் படமாக இருந்தாலும் அதில் அஜீத் கெஸ்ட் ரோலில் மட்டுமே பண்ணிருந்ததால் நிறைய இடங்களில் படம் பெரிதாக செல்லவில்லையாம்.

குறிப்பாக சிட்டி சைடு மட்டுமே படம் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக 6 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் வலிமை படத்தின் வியாபாரத்திற்கும் சற்று சறுக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் தமிழ் சினிமாவுக்கே பைனான்ஸ் செய்யும் அன்புச்செழியனிடம் படத்தை விற்றுவிட்டார் போனி கபூர்.

மாஸ்டர் பிளான். தமிழ் சினிமாவில் அன்புச்செழியனின் ராஜாங்கம் தான். இதனால் அந்தப் படம் நஷ்டமாகி விட்டது பணத்தை கொடுங்கள் என யாரும் கேட்க முடியாது. இருந்தாலும் அவரே முன்வந்து 6 கோடி நஷ்டத்திற்கு வட்டியுடன் சேர்த்து கொடுத்து விடுகிறேன் என கூறிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

nerkonda-paarvai-cinemapettai
nerkonda-paarvai-cinemapettai
- Advertisement -