திருமணத்திற்கு முன் நெப்போலியனை பார்த்து தெறித்து ஓடிய மனைவி.. எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு படத்தின் வில்லத்தனம்

தமிழ் சினிமாவில் ஒரு சில வில்லன்களை மட்டும் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் அப்படி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நெப்போலியன்.

நெப்போலியன் ஆரம்பகால திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாகயிருந்தது எஜமான் திரைப்படம். இப்படத்தில் ரஜினிகாந்த் மீனா மற்றும் நெப்போலியன் ஆகியோர் சிறப்பாக நடித்து ரசிகர்களிடம் தற்போது வரை நீங்காத இடத்தை பிடித்துள்ளனர்.

இப்படம் வெளியான காலத்தில் திரையரங்குகளில் சக்க போடு போட்டது. இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்த் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

napoleon
napoleon

எப்படி எஜமான் படத்தில் ரஜினிகாந்த் காமெடி நடிப்பை ரசிகர்கள் ரசித்தார்களோ அதே அளவிற்கு நெப்போலியனின் வில்லத்தனமான நடிப்பையும் ரசிகர்கள் கொண்டாடினர். அப்போதெல்லாம் அவரைக் கண்டு நடுங்காத 80 கிட்ஸ் கிடையாது.

அதுமட்டுமில்லாமல் படத்தில் செம்பட்டை விசிலு என்னும் டயலாக் மிகவும் பிரபலமாகயிருந்தது. இப்படத்தின் நெப்போலியனுக்கு வலதுகரமாக அந்த கதாபாத்திரத்தில் தளபதி தினேஷ் நடித்திருப்பார்.

வயிற்றில் வளரும் கருவிற்கு விஷம் கொடுக்கச் சொல்லி வல்லவராயன் என்ற கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருப்பார். அதுமட்டுமின்றி சொந்த தம்பியையும் இப்படத்தில் கொன்று விடுவார். அந்த அளவிற்கு ஆக்ரோஷமான வில்லனாக நடித்து இருப்பார்.

முதல்முறையாக நெப்போலியன் பெண் பார்க்க சென்ற போது இவரது வில்லத்தனமான நடிப்பை பார்த்து அவரது மனைவி இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறினாராம். பின்பு அது வெறும் படம் தான் என்று சமாதானப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர், என்பதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்