உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி எப்படி இருக்கு?.. வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

தமிழ் சினிமாவில் சமீப காலமாக சமூக சிந்தனை சார்ந்த திரைப்படங்கள் அதிகமாக வெளிவர ஆரம்பித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் வெளியாகி இருக்கிறது. போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆர்டிகல் 15 திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம்.

nenjukku neethi udhayanidhi stalin
nenjukku neethi udhayanidhi stalin

இப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் தற்போது திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

udhayanidhi stalin
udhayanidhi stalin

படத்தின் முதல் பாதியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு காட்சிகளும் சிறப்பாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி விறுவிறுப்புடன் செல்வதாகவும் படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்திற்கு வாழ்த்துக்களையும், உதயநிதி ஸ்டாலின் நடிப்பையும் பாராட்டியுள்ளார்.

nenjuku needhi
nenjuku needhi

மேலும் இந்தியில் வெளியான படத்தின் கதை கருவை மட்டும் எடுத்துக் கொண்டு அதை மிக அழகாக தமிழில் காட்டியிருக்கும் இயக்குனருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற ஆரி இந்த படத்தில் அற்புதமாக நடித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

nenjuku needhi
nenjuku needhi

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தை பார்த்த தமிழக முதல்வர் படக்குழுவினரை மனதார பாராட்டி இருந்தார். அந்த வகையில் தற்போது உலக அளவில் வெளியாகி இருக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

nenjuku needhi
nenjukku needhi