வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கேரியரை கெடுக்கும் அளவிற்கு நெல்சன் கொடுத்த ஓபன் டாக்.. கோபத்தில் கொதித்துப் போயிருக்கும் சூப்பர் ஸ்டார்  

2018 ஆம் ஆண்டு கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் திலீப் குமார், அதன் பிறகு சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கி பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை வாரி குவித்தார். அதன்பின் இவருக்கு தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் வெற்றியை பொருத்து தான், இவர் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். அந்த அளவிற்கு இவர் அனைவராலும் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாத நெல்சன், தன்னுடைய கேரியரை கெடுக்கும் அளவிற்கு பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி மாட்டிக்கொண்டார். இவருடைய பேச்சை கேட்டதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோபத்தில் கொந்தளித்துள்ளார்.

Also Read: தேரை இழுத்து தெருவுல விட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. திருட்டு சம்பவத்தால் வருமான வரி வரை சென்ற சோகம்

ஏற்கனவே தளபதி விஜய்யின் பீஸ்ட் படம் தோல்வி படமாக அமைந்த பிறகு, ரஜினி தன்னுடைய ஜெயிலர் படத்தின் வாய்ப்பை நெல்சனுக்கு கொடுக்கலாமா வேண்டாமா என ஆழ்ந்த யோசனையில் இருந்தார். ஆனால் இளம் இயக்குனரை நம்ப வைத்து ஏமாற்றக்கூடாது என, வாக்கு கொடுத்தபடி ஜெயிலர் படத்தை தூக்கி கொடுத்தார்.

இந்த நிலையில் இவரும் இவரது நண்பர் லோகேஷ் கனகராஜூம் ஒரு விழாவில் கலந்து கொண்டனர். அதில் லோகேஷுக்கு ஒரு மரியாதை, இவருக்கு ஒரு மரியாதை கொடுத்து அவமானப்படுத்தப்பட்டதாக கூறினார். ‘எனக்கு சினிமாவில் இருக்க ஆசை இல்லை. படங்களை இயக்கவும் ஆசை இல்லை. எனது அப்பா தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தார்.

Also Read: முத்து படம் இல்லையென்றால் அஜித் இல்லை.. 27 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த ஏகேவின் வெற்றி ரகசியம்

எனக்கு மெடிக்கல் படிக்க வேண்டும் இல்லையென்றால் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் நான் 80 சதவீத மதிப்பெண் தான் பெற்றேன். என் அப்பா என்னை விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க சொன்னார். நான் முடியாது என்றேன். அதன் பின் நல்ல  காலேஜில் இன்ஜினியரிங் கிடைத்தால் படி இல்லையென்றால், விஷுவல் கம்யூனிகேஷன் படி.  முடியாது என்றால் ஏதாவது மெக்கானிக் செட்டிற்கு வேலைக்கு போ என்று சொல்லிவிட்டார்.

வேறு வழியில்லாமல் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். அது என்ன படிப்பு என்றே தெரியாமல். ஆனாலும் படித்தேன். இரண்டாம் ஆண்டு வரும்பொழுது எனது அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை. இதனால் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த படிப்பை முடித்து, தற்போது இந்த இடத்தில் இருக்கிறேன். ஆனால் எனக்கு இதில் விருப்பமில்லை என்று கூறியிருக்கிறார்.

Also Read: சூப்பர் ஸ்டார் உடன் கிசுகிசுக்கப்பட்ட 5 நடிகைகள்.. செட் ஆகாமல் கடைசியில் ரஜினி எடுத்த முடிவு

இப்படிப்பட்ட மனநிலை கொண்டவரான நெல்சனுக்கு தான் ஜெயிலர் படத்தின் வாய்ப்பை கொடுத்திருக்கிறோமா என்று ரஜினி தற்போது உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார். ஏனென்றால் ரஜினிக்கும் அண்ணாத்த  படத்திற்கு பிறகு ஜெயிலர் முக்கியமான படமாக இருப்பதால், நெல்சன் சூப்பர் ஸ்டாரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா என்ற சந்தேகம்  இவருடைய பேட்டியை கேட்ட பின்பு பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

Trending News