2kகிட்ஸை திசை மாற்றும் நெல்சன், லோகேஷ்.. விதை போட்ட அந்த படம்

Nelson – Lokesh : ஒரு காலத்தில் படங்கள் எல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூட்டு குடும்பமாக உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு இருந்தது. ஆனால் இப்போது தமிழ் சினிமாவின் நிலைமையே அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. அதுவும் நெல்சன் மற்றும் லோகேஷ் படங்கள் எல்லாமே ரத்த களறியாக தான் இருக்கிறது.

அதுவும் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் பெரியவர்களே பார்க்க அச்சப்படும் அளவுக்கு காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஒருபடி மேலாகவே லியோ படத்திலும் ரத்தம் தெறிக்கும்படி லோகேஷ் காட்சிப்படுத்தி இருந்தார். இப்போது உள்ள 2k கிட்ஸ் வரவேற்று வருகிறார்கள்.

அதுவும் அதுபோன்ற காட்சிகள் திரையில் ஒளிபரப்பாகும் போது விசில் அடித்து ஆரவாரம் செய்கின்றனர். இவ்வாறு தமிழ் சினிமா ஆக்ரோஷமான பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு காரணம் கேஜிஎஃப் படம் தான். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இது போன்ற படங்களை எடுக்க தயங்கிக் கொண்டுதான் இருந்தார்கள்.

Also Read : பவுடர், ரத்தக்களரி இல்லாத சினிமா.. லோகேஷ், நெல்சனை குத்தி பேசிய சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்

ஆனால் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் பான் இந்தியா படமாக வெளியாகி இருந்தது. இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தாலும் மக்கள் அச்சப்படும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. ஆனால் இப்போது சினிமாவை பொறுத்தவரையில் வியாபாரம் மட்டுமே முதன்மையாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் வசூல் மட்டும் கொடுத்து விட்டால் போதும் என்று தான் இப்போது தமிழ் சினிமாவின் நிலைமையும் மாறிவிட்டது. ஆகையால் லோகேஷ் மற்றும் நெல்சன் போல தான் இப்போது மற்ற இயக்குனர்களும் எந்த எல்லைக்கும் சென்று படத்தை எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.

Also Read : லோகேஷ் குழப்பத்திற்கு முடிவு கட்டிய ஷாருக்கான்.. இது என்னடா தலைவருக்கு வந்த சோதனை

Next Story

- Advertisement -