தளபதி 65 இயக்குனர் நெல்சனின் மனைவியா இது? அழகா ஹீரோயின் மாதிரி இருக்காங்கப்பா!

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பே வேட்டை மன்னன் எனும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக வேண்டியவர்தான் நெல்சன் திலீப்குமார். ஆனால் சிம்பு நடிப்பில் உருவான அந்த படம் பாதியில் கைவிடப்பட்டது.

அந்த படத்தை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கினார் நெல்சன். எதிர்பாராத வெற்றி பெற்ற அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

முன்னதாக மார்ச் 26ஆம் தேதி வெளியாக இருந்த டாக்டர் திரைப்படம் தேர்தல் காரணமாக தற்போது மே மாதம் ரம்ஜான் விடுமுறையில் வெளியாக உள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களைத் தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் தளபதி விஜய்யை வைத்து தளபதி65 எனும் பெயரிடப்படாத படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

இதற்காக சமீபத்தில் ரஷ்யா சென்றுள்ள நெல்சன் திலீப்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்களை பகிர்ந்தார். இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலீப்குமார் இருவரும் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

அப்போது இரண்டு குடும்பத்தினரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அதில் நெல்சன் திலீப்குமார் மனைவி புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு ஹீரோயின் போல் இருக்கும் அவரின் பெயர் என்ன என்பதை தற்போது இணையத்தில் ரசிகர்கள் தேடத் தொடங்கியுள்ளனர்.

nelson-dilipkumar-wife
nelson-dilipkumar-wife
- Advertisement -