நெல்சனை தூக்கி விட்ட சிம்பு.. சிவகார்த்திகேயனை விட இவ்வளவு நெருக்கமா.!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் ஏற்கனவே கோலமாவு கோகிலா என்னும் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். ஆனால் சிம்புவை வைத்து இவர் வேட்டை மன்னன் எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். ஒரு சில காரணங்களால் இப்படத்தை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது.

ஆனால் நெல்சன்னுக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தது சிம்பு தான். சிம்புவும் நெல்சன்னும் சிறிய வயதிலிருந்தே நண்பர்களாக இருந்துள்ளனர். சிம்பு நடிப்பு துறையில் கவனம் செலுத்த, நெல்சன் இயக்குனர் துறையில் கவனம் செலுத்தினார். இவர்கள் இருவரும் தனித்தனி துறையில் பணியாற்றி இருந்தாலும் எப்போதும் தொடர்பிலேயே இருந்து வந்துள்ளனர்.

நெல்சன்னுக்கு விஜய் டிவியில் பிரபல நடன நிகழ்ச்சியை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது நெல்சன் சிம்புவை நடுவராக கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளார். சற்றும் விருப்பம் இல்லாமல் இருந்தாலும் நெல்சன்காக சிம்பு அந்த நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டுள்ளார்.

அதன் பிறகு நெல்சன் திலீப்குமார் படத்தை இயக்க வேண்டுமென முடிவு செய்துள்ளார். அப்போது சிம்புவிடம் படத்தின் கதையை பற்றி கூறியுள்ளார். பின்பு நெல்சன் நண்பன் என்பதால் சிம்பு படத்தில் கண்டிப்பாக நடிக்கிறேன் என கூறியுள்ளார். அதன் பிறகுதான் வேட்டை மன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது. பின்பு ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போக படப்பிடிப்பை பாதிலேயே நிறுத்தி வைத்தனர்.

vettai-mannan-simbu
vettai-mannan-simbu

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதனால் சிம்புவை வைத்து நெல்சன் இயக்கிய வேட்டை மன்னன் திரைப்படத்தை கூடிய விரைவில் இயக்குவார் என கூறி வருகின்றனர். தற்போது பீஸ்ட் படத்தை இயக்கி வருவதால் இப்படத்திற்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் வேட்டை மன்னன் படத்தை இயக்குவார் என கூறிவருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்