நீயா நானா கோபிநாத்தின் அண்ணன் யார் தெரியுமா.? அட அவரும் ஒரு சீரியல் நடிகரா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியான நீயா நானா எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் கோபிநாத். இந்த நிகழ்ச்சியின் மூலம் மற்ற தொகுப்பாளர்கள் போல இவருக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

பின்பு தோனி, நிமிர்ந்து நில் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதுவரைக்கும் கோபிநாத்தான் படத்தில் நடித்துள்ளார் என நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் இவரது குடும்பத்திலேயே மற்றொரு நடிகர் உள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். கோபிநாத் பணியாற்றிய விஜய்டிவிலேயே பிரபல சீரியல் ஆன நாம் இருவர் நமக்கு இருவர் எனும் சீரியலில் கோபிநாத்தின் அண்ணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

prabhakaran
prabhakaran

அதுமட்டுமில்லாமல் கோபிநாத்தின் அண்ணன் பிரபாகரன் மற்றொரு பிரபல தொலைக்காட்சியான ஜீ தொலைக்காட்சியில் ஊர்ல ஒரு ராஜகுமாரி என்னும் சீரியலில் முக்கியமான கதாபாத்திரம் நடித்து வருகிறார்.

கோபிநாத்தின் தந்தையும் ஒரு நடிகர் என்பதால் குடும்பமே ஒரு கலை குடும்பமாக மாறியுள்ளது. இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களும் சமூகவலை தளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்