தீவிர சிகிச்சை பிரிவில் நஸ்ரியா கணவர் பகத் பாசில்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகையான நஸ்ரியா கணவர் பகத் பாசில் திடீரென தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மலையாளத்தில் மிகப்பெரிய நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். தமிழிலும் பேமஸ் ஆன நடிகர் தான். ஹீரோயிசம் காட்டாமல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் என்ன தேவை என்பதை அறிந்து அசால்டாக நடிப்பவர்.

நடிக்கத் தெரிந்த சில நடிகர்களில் பகத் பாசில் கண்டிப்பாக ஒரு முக்கிய இடம் பிடித்திருப்பார். தற்போது அவர் மலையாளத்தில் மலையன் குஞ்சு எனும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை சஜிமோகன் என்ற இளம் இயக்குனர் இயக்கி வருகிறார்.

fahadfazil-nazriya-cinemapettai
fahadfazil-nazriya-cinemapettai

கேரளா மாநிலம் கொச்சியில் ஸ்டன்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்துள்ளது. இதில் எதிர்பாராத விதமாக பகத் பாசிலுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் தலை குப்புற விழுந்தால் முகத்தில் பலத்த அடி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இதன் காரணமாக அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தெரிந்து உடனடியாக நஸ்ரியா பதட்டத்துடன் மருத்துவமனைக்கு சென்றதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தற்போது பகத் பாசில் நலமாக இருக்கிறாராம். மேலும் கண்டிப்பாக ஒரு சில மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறிய நிலையில் மலையன் குஞ்சை படப்பிடிப்பு தள்ளி செல்ல அதிக வாய்ப்புள்ளதாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்