அஜித் ரசிகை நஸ்ரியா விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம்..

தமிழ் சினிமாவில் நடிக்க பல நடிகைகள் வந்தாலும் மலையாள நடிகைகளைப் போல பெரிய அளவு யாருக்குமே ஆரம்பத்தில் வரவேற்பு கிடைப்பதில்லை. அப்படி நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நஸ்ரியா நசீம்.

அதனைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் நஸ்ரியா மீது ரசிகர்களுக்கு காதல் வரக் காரணமாக அமைந்தது. ராஜா ராணி படத்தில் நஸ்ரியா சுட்டி குழந்தை போல் நடித்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

அதனை தொடர்ந்து நய்யாண்டி, வாயை மூடி பேசவும் மற்றும் திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் விரைவில் முன்னணி நடிகையாக மாறி விடுவார் என நினைத்தபோது மலையாள சினிமாவின் மூத்த நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் பெரிய அளவு வயது வித்தியாசம் இருந்தாலும் நஸ்ரியா காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்குமே அதிர்ச்சி தான். அதன் பிறகு நான்கு வருடமாக சினிமா பக்கம் தலை வைத்து கூட படுக்க வில்லை நஸ்ரியா.

இந்நிலையில் மீண்டும் தற்போது சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நஸ்ரியா தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் வாய்ப்புகளை பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் வாய்ப்புகளைப் பெறுவதற்காக அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு முன்னோட்டமாக தளபதி விஜய்யின் சமீபத்திய ட்ரெண்டிங் பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ கிட்டதட்ட 6 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.