தாய் பாசத்தில் தெரேசாவை மிஞ்சிய நயன்தாரா.. குடியிருக்கும் அப்பார்ட்மெண்டில் பண்ணும் அராஜகம்

Nayanthara Kids: வாடகை தாய் மூலம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் இரண்டு ஆண்குழந்தைகளை பெற்றெடுத்தனர். எக்மோரில் உள்ள ஹைரைஸ் அப்பார்ட்மெண்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளை பார்த்துக்கொள்ள இரண்டு நர்சிங் தெரிஞ்ச கேர் கேட்டக்கர்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர்.

குழந்தைகளுக்காக நயன்தாரா வெளிநாடு படப்பிடிப்புகளை தவிர்த்து வருகிறார். சென்னையில் கூட தூரமான இடங்களில் சூட்டிங் வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறார். காலையில் 10:00 மணிக்கு வந்துவிட்டு மாலையில் 4 மணிக்கு சென்று விடுகிறாராம். குழந்தைகளுக்காக நேரம் செலவிடவும் பாதுகாப்பாக வளர்ப்பதற்கும் பாதி படங்களை ரிஜெக்ட் செய்து வருகிறார்.

எக்மோரில் இவர் குடியிருக்கும் ஹைரைஸ் அப்பார்ட்மெண்டில் சாயங்காலப் பொழுது வீட்டை விட்டு கீழே குழந்தைகளோடு பார்க்கில் வந்து நேரத்தை செலவிடுவாராம். அப்பொழுது அங்கு நடைபெறும் விஷயங்கள் தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. குழந்தைகளை கண் சிமிட்டாமல் இவர் பார்த்துக் கொள்வது அப்பார்ட்மெண்ட் வாசிகளை ஆச்சரியப்படுத்துகிறது.

அப்பார்ட்மெண்டில் லேடி சூப்பர் ஸ்டார் பண்ணும் அராஜகம்

அப்பார்ட்மென்ட்குள்ளே சமீபத்தில் ஒரு ஆட்டோ காரர் மிக வேகமாக வந்திருக்கிறார். அவரை நிப்பாட்டி குழந்தைகள் விளையாடும் இடத்தில் இவ்வளவு வேகமா வருவதா என அந்த டிரைவரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார் நயன்தாரா. அம்மா தாயே விடுங்கள் என்று தலை தெறிக்க ஓடி விட்டாராம் ஆட்டோ டிரைவர்.

இந்த சம்பவத்திற்கு அடுத்து ஸ்விக்கி டெலிவரி பாய் அந்த அப்பார்ட்மெண்டுக்குள் வந்திருக்கிறார். இவர்கள் தளத்திற்கு சென்று மொபைல் போனில் மிகவும் சத்தமாக பேசி இருக்கிறார். வெளியே வந்த நயன்தாரா குழந்தைகள் தூங்குகிறார்கள் இங்கே வந்து இப்படி சத்தம் போடுறிங்க என டெலிவரி பாய்க்கு செம டோஸ் விட்டிருக்கிறார். இதைப்போல் 18 பேர் கூட உரண்டை இழுத்தது இவர் மீது கம்ப்ளைன்டாக அசோசியேஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளது

இப்படி அன்னை தெரேசாவையும் மிஞ்சும் அளவிற்கு குழந்தைகள் மீது அளவு கடந்த பாசம் வைத்து வளர்த்து வருகிறார் நயன்தாரா. என்ன இருந்தாலும் தாய் பாசத்துக்கு ஈடு இணை எதுவும் கிடையாது என்பதை லேடி சூப்பர் ஸ்டார் அனைவருக்கும் உணர்த்தி வருகிறார். சமீபத்தில் குழந்தைகளை கூட்டிக்கொண்டு லண்டன், ஸ்விட்சர்லாந்து என சுற்றுலா சென்று திரும்பி வந்தாராம்.

- Advertisement -